12 பந்தில் 51 ரன்ஸ்.. மொத்தமாக 234 ரன்ஸ்.. டெல்லியை துவைத்த மும்பை.. தனித்துமான உலக சாதனை

MI vs DC 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி வான்கடே கிரிக்கெட் தானத்தில் நடைபெற்ற 20வது லீக் போட்டியில் டெல்லியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 234/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 49, டிம் டேவிட் 45*, கேப்டன் பாண்டியா 39, ரொமரியா செபார்ட் 39* ரன்கள் எடுத்தனர்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அன்றிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 235 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 66 (40), அபிஷேக் போரேல் 41 (31) ரன்கள் எடுத்துப் போராடினார். இருப்பினும் டேவிட் வார்னர் 10, கேப்டன் ரிஷப் பண்ட் 1, அக்சர் படேல் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மும்பையின் உலக சாதனை:
அதனால் மிடில் ஆர்டரில் சரவெடியாக விளையாடி 19 பந்தில் அரை சதமடித்த இளமம் வீரர் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிகபட்சமாக 71* (25) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் டெல்லி 205/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக ஹாட்ரிக் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்திய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 4, பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

முன்னதாக இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக கடைசி 2 ஓவரில் மட்டும் மும்பை அணி 12 பந்துகளில் 51 ரன்கள் அடித்தது. குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிராக 20வது ஓவரில் மட்டும் ரொமாரியா செஃபார்ட் 32 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் கடைசி 2 ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி புதிய சாதனையை மும்பை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. மும்பை : 51, டெல்லிக்கு எதிராக, 2024*
2. பஞ்சாப் : 49, பெங்களூருக்கு, 2020
3. பெங்களூரு : 48, பஞ்சாப்புக்கு எதிராக, 2019

- Advertisement -

அதை விட இப்போட்டியில் சூரியகுமார் யாதவ் 0, திலக் வர்மா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் ரோகித் சர்மா 49, இசான் கிசான் 42, ஹர்திக் பாண்டியா 39, டிம் டேவிட் 45*, ரொமாரியா செபாஃர்ட் 39* ரன்களை அதிரடியாக எடுத்து மும்பையை 234/5 ரன்கள் குவிக்க உதவினார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் மும்பையின் எந்த பேட்ஸ்மேனும் 50 ரன்கள் தாண்டவில்லை.

இதையும் படிங்க: கடின உழைப்புக்கான பரிசு.. என்னோட பேட்டிங் பவருக்கு அது தான் காரணம்.. ஆட்டநாயகன் செஃபார்ட் பேட்டி

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அரை சதமடிக்காமலேயே ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையை மும்பை படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. மும்பை இந்தியன்ஸ் : 234/5, டெல்லிக்கு எதிராக, 2024*
2. சோமர்செட் : 226/5, கென்ட்க்கு எதிராக, 2018
3. அயர்லாந்து ஏ : 222/5, நேபால் ஏ, 2024

Advertisement