கடின உழைப்புக்கான பரிசு.. என்னோட பேட்டிங் பவருக்கு அது தான் காரணம்.. ஆட்டநாயகன் செஃபார்ட் பேட்டி

Romario Shepherd
- Advertisement -

அனல் பறக்க நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற 20வது லீக் போட்டியில் டெல்லியை 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் ஹாட்ரிக் தோல்விகளுக்குப் பின் பாண்டியா தலைமையில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த மும்பை நிம்மதி பெருமூச்சு விட்டது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 234/5 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 49, இஷான் கிசான் 42, கேப்டன் ஹர்திக் பாண்டியா 39, டிம் டேவிட் 45*, ரொமாரியோ செஃபார்ட் 39* ரன்கள் எடுத்தனர். டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 235 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரித்வி ஷா 66, அபிஷேக் போரேல் 41 ரன்கள் அடித்து போராடினர்.

- Advertisement -

கடின உழைப்பு:
இருப்பினும் டேவிட் வார்னர் 10, கேப்டன் ரிஷப் பண்ட் 1, அக்சர் பட்டேல் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் 19 பந்தில் 50 ரன்கள் அடித்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் 71* (25) ரன்கள் விளாசி போராடியும் 20 ஓவரில் டெல்லி 205/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பைக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 4, பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 32 ரன்கள் அடித்து மொத்தமாக 39* (10) ரன்களை விளாசி முக்கிய பங்காற்றிய ரொமாரியோ செஃபார்ட் சந்தேகமின்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்தது வீண் போகவில்லை என்று தெரிவிக்கும் அவர் சில இந்திய உணவுகளை சாப்பிடுவதே தம்முடைய பேட்டிங் பவருக்கு காரணம் என்று கலகலப்பாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கடினமான உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது. வலைப்பயிற்சியில் நான் அதிகமான கடின உழைப்பை போட்டுள்ளேன். கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும் போது நீங்கள் தெளிவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டிம் டேவிட் நீங்கள் பந்தை எதிர்கொண்டு அடியுங்கள் என்று உற்சாகத்தை கொடுத்தார்”

“பந்தை பயன்படுத்திக் கொள்வதற்கான சரியான இடத்தில் நான் இருந்தேன். நான் எப்போதும் ஒருதலைபட்சமாக செயல்பட விரும்பாததால் 50 – 50 பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் விளையாட முயற்சிக்கிறேன். பேட்டிங் செய்வதற்கான பவர் அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் வருகிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக சில இந்திய உணவுகளை சாப்பிடுகிறேன்” என்று கூறினார்.

Advertisement