IND vs WI : ஜெயவர்த்தேனேவின் தனித்துவ சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்து 121 ரன்கள் எடுக்க ரோகித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ரவீந்திர ஜடேஜா 61, அஸ்வின் 46 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தனர்.

Kohli-1

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச், ஜோமேல் வேரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 75, தக்நரேன் சந்தர்பால் 33, மெக்கன்சி 32, அலிக் அதனேஷ் 37 என முக்கிய வீரர்கள் ஓரளவு நல்ல ரன்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தனர். அதனால் 208/4 என்ற நல்ல நிலைமையில் இருந்த அந்த அணியை 4வது நாள் முதல் மணி நேரத்தில் அனலாக பந்து வீசி வெறும் 255 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ஹிட்மேன் உலக சாதனை:
அதை தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மீண்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். குறிப்பாக இந்த தொடரில் ஏற்கனவே நிறைய சாதனைகளை படைத்த அவர்கள் விரைவாக ரன்கள் குவித்து வெற்றிக்காக டிக்ளேர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வரலாற்றிலேயே அதிவேகமாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.

அப்படி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (44) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தனது பங்கிற்கு 4 பவுண்டரி 1 சிக்சருடன் ஜெய்ஸ்வால் 38 (30) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் இஷான் கிசான் அதிரடியாக 52* (34) ரன்களும் கில் 29* ரன்களும் எடுத்ததால் இந்தியா 181/2 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதை தொடர்ந்து 365 என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4வது நாள் முடிவில் 76/2 என்ற ஸ்கோருடன் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் ஏற்கனவே சதமடித்து அசத்தி வரும் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய கடைசி 30 இன்னிங்ஸில் முறையே 12, 161, 26, 66, 25*, 49, 34, 30, 36, 12*, 83, 21, 19, 59, 11, 127, 29, 15, 46, 120, 32, 31, 12, 12, 35, 15, 43, 103, 80, 57 என 10 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் மஹிளா ஜெயவர்த்தனேவின் தனித்துவமான சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ரோகித் சர்மா (இந்தியா) : 30*
2. மஹிளா ஜெயவர்த்தனே : (இலங்கை)
3. லேன் ஹட்டன் (இங்கிலாந்து) : 25
3. ரோகன் கன்காய் (வெஸ்ட் இண்டீஸ்) : 15
4. ஏபி டீ வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) : 24

Rohit-Sharma

இதையும் படிங்க:33 வயதிலேயே திடீர் ஓய்வை அறிவித்து ரசிகர்களை வருத்தமடைய செய்த இலங்கை வீரர் – விவரம் இதோ

அது போக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் ஆல் டைம் பட்டியலில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையும் அவர் தகர்த்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 2092*
2. விராட் கோலி : 2063
3. செடேஸ்வர் புஜாரா : 1769

மேலும் 35 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அதிவேக அரை சதத்தையும் பதிவு செய்தார். இதற்கு முன் 2021இல் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 50 ரன்கள் தொட்டதே முந்தைய சாதனையாகும்.

Advertisement