33 வயதிலேயே திடீர் ஓய்வை அறிவித்து ரசிகர்களை வருத்தமடைய செய்த இலங்கை வீரர் – விவரம் இதோ

Lahiru-Thirimanne
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து ரசிகர்களை வருத்தமடைய செய்து வரும் வேளையில் தற்போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஒருவரும் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளார். அந்த வகையில் 33 வயது மட்டுமே நிரம்பிய லஹிரு திரிமன்னே திடீரென தனது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.

Lahiru-Thirimanne-1

- Advertisement -

லஹிரு திரிமன்னே கடந்த 2010-ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாகி இதுவரை 127 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3194 ரன்கள் குவித்துள்ளார். அதில் நான்கு சதங்கள் மற்றும் 21 அரைச்சதங்கள் அடங்கும்.

அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 44 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2088 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும், 10 அரை சதங்களும் அடங்கும். அதே போன்று 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 291 ரன்கள் குவித்துள்ளார். இலங்கை அணிக்காக மூன்று விதமான சர்வதேச போட்டியிலும் விளையாடியுள்ள அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றபோது முக்கிய பங்காற்றியவர்.

Lahiru-Thirimanne-2

கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் கடைசியாக 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாலே இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் லஹிரு திரிமன்னே தனது ஓய்வு முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது : இலங்கை அணிக்காக விளையாடியதை நினைத்து மிகவும் பெருமையாக கருதுகிறேன். கிரிக்கெட் எனக்கு நிறைய விடயங்களை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : முரட்டுத்தனமாக அடித்த இளம் தோனி, வெளியே போங்க என்று சொன்ன லாரா – மறக்க முடியாத 2006 வரலாற்று வீடியோவ பாருங்க

எனக்கு வாய்ப்பளித்த மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அடுத்த கட்ட பயணத்திற்காக தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement