கைரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit and Pollard
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான பார்மை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்கிற பேச்சுகளும் எழ ஆரம்பிட்டன. அந்த அளவிற்கு ரோகித் சர்மாவின் ஆட்டம் படுமோசமாக இருந்தது.

பொல்லார்டின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா :

ஆனால் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து தற்போது அவர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது 76 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த ரோகித் சர்மா நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை குவிக்க பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 46 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 70 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இப்படி அடுத்தடுத்த இவரது இந்த சிறப்பான ஆட்டம் மீண்டும் மும்பை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அதோடு நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இந்த தொடரில் தங்களது 5 ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மூன்று சிக்ஸர்களை விளாசிய ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணிக்காக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரராக கைரன் பொல்லார்டு முதலிடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : 84 ரன்ஸ் அடிச்சு பிரஞ்சுருந்த அப்பா, அம்மாவை சேத்து வெச்சேன்.. அப்பா என் பேட்டிங்கை பாத்தா பிடிக்காது.. யுவி பேட்டி

மும்பை அணிக்காக 193 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கைரன் பொல்லார்டு 258 சிக்ஸர்களை அடித்திருந்தார். இவ்வேளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மூன்று சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ரோகித் சர்மா 225 இன்னிங்ஸ்களில் 260 சிக்ஸர்களை விளாசி மும்பை அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற வரலாறு சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement