அவரு மோசமா விளையாடினாலும் அவரை அணியில் இருந்து நீக்க மாட்டேன்.. இளம்வீரருக்கு ஆதரவாக – ரோஹித் சர்மா பேட்டி

Prasidh
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய முதல் பாக்ஸிங் டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

- Advertisement -

இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் மோசமான பந்துவீச்சே பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.

குறிப்பாக அவர்கள் இருவரும் ரன்களை வாரி வழங்கியதோடு சேர்த்து விக்கெட்டையும் பெரிய அளவில் வீழ்த்தும் முனைப்பு காட்டாததால் அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும் என்று அனைவரது மத்தியிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவிற்கு ஆதரவாக தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : பிரசித் கிருஷ்ணாவிற்கு அனுபவம் குறைவுதான் ஆனாலும் தன்னிடம் இருக்கும் திறன்களை அவர் வெளிக்காட்டியுள்ளதாலே அவர் இவ்வளவு தூரம் வந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் காயம் காரணமாகவும் சிலர் அணியில் தேர்வு செய்யப்படாமலும் இருக்கின்றனர். தற்போதைக்கு அணியில் இருக்கும் அனைவருமே மிகவும் திறமையான வீரர்கள் தான்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் தோற்க அம்பயர் தான் காரணம்.. முகமது ஹபீஸ் அதிரடி விமர்சனம்.. நடந்தது என்ன?

குறிப்பாக பிரசித் கிருஷ்ணா தனது சிறப்பான செயல்பாட்டின் மூலமாகவே இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் போட்டியில் அவர் சற்று பதட்டமாக இருந்தாலும் அவரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். நிச்சயம் அவருடைய திறனை வெளிக்காட்டி இந்த பின்னடையில் இருந்து மீண்டு வருவார் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement