- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்டார்க், ஸ்டார்க் என அமெரிக்காவில் கத்திய ரசிகர்களிடம்.. ரோஹித் சர்மா வைத்த பெருந்தன்மையான கோரிக்கை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா கடைசி வரை தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளையும் உடைத்துள்ளது. முன்னதாக அந்தத் தொடரில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

ரோஹித் கோரிக்கை:
குறிப்பாக ஐசிசி தொடர்களின் அற்புதமான பவுலராக அறியப்படும் மிட்சேல் ஸ்டார்க் 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு எதிராக ஒரே ஓவரில் 6, 6, 4, 6, 0, 6 என அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட ரோஹித் சர்மா 28 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக ஸ்டார்க்கிற்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் ரோஹித் சர்மா சாதனை படைத்தார்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை பந்தாடிய ரோகித் சர்மா தன்னுடைய சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 92 (41) ரன்களில் அவுட்டானாலும் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் அமெரிக்காவின் டாலஸ் நகரில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா கலந்து கொண்டார். அப்போது ரோகித் பேச துவங்கியதும் “மிட்சேல் ஸ்டார்க், மிட்சேல் ஸ்டார்க்” என அங்கிருந்த ரசிகர்கள் கத்தினர்.

- Advertisement -

அப்போது ரசிகர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு நிமிடம். ஒரு நிமிடம். நண்பர்களே மிகவும் மரியாதையுடன் இருங்கள்” என்று கூறினார். அதாவது ஒரு ஓவரில் தாம் அதிரடியாக அடித்தாலும் இப்போதும் ஸ்டார்க்கிற்கு தரமானவர் என்பதால் அவருக்கு மரியாதை கொடுங்கள் என்று ரசிகர்களிடம் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டார். அப்படி அவர் சொன்னதும் ரசிகர்கள் இன்னும் அதிகமாக கூச்சலிட்டனர்.

இதையும் படிங்க: சுப்மன் கில் உங்களின் சதத்தை தடுத்தாரா? ரசிகர் கேட்ட கேள்விக்கு ஜெய்ஸ்வால் நேராக பதில்

அதனால் “அமைதியாகுங்கள் நண்பர்களே” என்று ரோஹித் சர்மா சிரித்துக்கொண்டே சொன்னார். அதே நிகழ்ச்சியில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவித்த ரோஹித் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கோப்பைகளை இந்தியாவுக்கு வெல்ல வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து நடைபெறும் இலங்கைத் தொடரில் ரோஹித் ஓய்வெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -