புதிய மாஸ் ஓப்பனிங் ஜோடியாக மிரட்டும் ரோஹித் – ஜெய்ஸ்வால், 24 வருடத்துக்கு பின் படைத்த வரலாறு உட்பட 3 சாதனைகள் இதோ

Jaiswal IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதன் வாயிலாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தையும் இந்தியா வெற்றியுடன் துவக்கிய நிலையில் ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Jaiswal and Rohit

- Advertisement -

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு கடந்த போட்டியை போலவே சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஆரம்பத்திலேயே சிறப்பாக எதிர்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டு அரை சதம் கடந்து அசத்தினர். அந்த வகையில் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 57 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த சுப்மன் கில் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

மிரட்டல் ஜோடி:
அந்த நிலைமையில் வந்த விராட் கோலி தனது தரத்தை காட்டிய நிலையில் எதிர்புறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரகானே 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகிலேயே தன்னுடைய 500வது போட்டியில் அரை சதமடித்து முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்து 87* ரன்கள் குவித்துள்ளார்.

Jaiswal-and-Rohit

அவருடன் தனது பங்கிற்கு 36* ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா 5வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தி வரும் நிலையில் முதல் நாள் முடிவில் 288/4 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இத்தொடரில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக ரன்கள் (229) குவித்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற இரட்டை சாதனைகளை படைத்தனர்.

- Advertisement -

1. அந்த நிலையில் இப்போட்டியிலும் 139 ரன்கள் குவித்துள்ள அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 வருடங்களுக்குப் பின் ஒரே தொடரின் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் அடுத்தடுத்த 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற சிறப்பான சாதனையும் படைத்துள்ளனர். இதற்கு முன் கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 137 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்த தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் மற்றும் தேவங் காந்தி ஆகியோர் கான்பூரில் நடைபெற்ற அதே தொடரின் அடுத்த போட்டியிலும் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

2. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒரு தொடரில் அதிக முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையும் அவர்கள் சுனில் கவாஸ்கர் – சேட்டன் சவுகான் (இங்கிலாந்துக்கு எதிராக, 1979) வீரேந்திர சேவாக் – ஆகாஷ் சோப்ரா (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2004) விரேந்திர் சேவாக் வாஷிம் ஜாஃபர் (வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2006) ஆகியோருடன் பகிர்ந்து (தலா 2) கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக் மற்றும் மேத்யூ ஹைடனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த – கிங் கோலி

3. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த முதல் இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற பெருமையை பெற்ற அவர்கள் இப்போட்டி நடைபெறும் ட்ரினிடாட் மைதானத்தில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற பெருமையும் பெற்றனர். அந்த பட்டியல்:
1. ஜெஃப்ரி பாய்காட் – டெனிஸ் அமிஸ் : 209, 1974
2. ஆர்தர் மோரிஸ் – கோலின் மெக்டொனால்ட் : 191, 1955
3. ரோகித் சர்மா – யசஸ்வி ஜெய்ஸ்வால் : 139, 2023*

Advertisement