உலக அளவில் மிக்பெரிய கௌரவத்தை பெற்ற ரோஹித் சர்மா – ஜஸ்பிரித் பும்ரா, என்ன தெரியுமா?

Jasprith Bumrah Rohit Sharma Wisden.jpeg
- Advertisement -

உலக அளவில் ஒவ்வொரு வருடமும் தங்களது அபார திறமையால் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக வெற்றிகளைத் தேடிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்களை இங்கிலாந்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற பழமையான கிரிக்கெட் இதழான “விஸ்டன்” தேர்வு செய்து கௌரவிப்பது வழக்கமான ஒன்றாகும். நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த விஸ்டன் அளிக்கும் கௌரவமானது ஐசிசி கொடுக்கும் கௌரவங்களை விட மிக உயரியதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமெனில் கடந்த 1864 அதாவது 158 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட இந்த விஸ்டன் பத்திரிகையில் இடம் பிடிப்பது உண்மையாகவே ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் மிகப்பெரிய உயரிய கௌரவமாகக் கருதுவார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளுக்காக சிறப்பாக செயல்படும் வீரர்களில் தரமானவர்களை கண்டறிந்து கௌரவிக்கும் விஸ்டன் இந்த வருடத்திற்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனக் 2022 எடிசனை அதன் ஆசிரியர் லாரன்ஸ் பூத் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ஜோ ரூட் டாப்:
அந்த அறிவிப்பின் படி 2022 வருடத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெறும் 15 டெஸ்ட் போட்டிகளில் 4 அரைசதங்கள் 6 சதங்கள் உட்பட 1708 ரன்களை 61.00 என்ற அபாரமான சராசரியில் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார். அதேப்போல் 27 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையும் பெற்ற அவர் சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த கவுரவத்தை பெற்று அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2021இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்தத் தொடரில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது போட்டியில் சதமடித்து 127 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் மொத்தமாக 8 இன்னிங்சில் 368 ரன்களை 52.57 என்ற அபார சராசரி விகிதத்தில் குவித்த அவர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி லாரன்ஸ் பூத் கூறியுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்தில் இந்தியா 2 – 1 என முன்னிலை பெற ரோகித் சர்மா இதயமாக செயல்பட்டார். லார்ட்ஸ் மைதானத்தில் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் 83 ரன்களை குவித்த அவர் ஓவல் மைதானத்தில் அபாரமாக செயல்பட்டு 127 ரன்கள் விளாசி முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்தியாவை முன்னிலைப் படுத்தினார். அவர் எடுத்த 368 ரன்கள் இதர இந்திய வீரர்களை விட அதிகமானது” என பாராட்டினார்.

முதல்முறையாக இரு இந்தியர்:
அவருடன் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இந்த பட்டியலில் மற்றொரு இந்தியராக இடம்பிடித்து கௌரவத்தை பெற்றுள்ளார். அதே இங்கிலாந்து தொடரில் 4 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 20.83 சராசரியில் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு பந்துவீச்சில் துருப்பு சீட்டாக செயல்பட்டார்.

- Advertisement -

இது பற்றி லாரன்ஸ் பூத் கூறியுள்ளது பின்வருமாறு.”இங்கிலாந்தில் இந்தியா பதிவு செய்த 2 வெற்றிகளில் அவர் முக்கிய பங்காற்றினார். லார்ட்ஸ் மைதானத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஓவலில் ஓலி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் செய்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அதேபோல் ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் அவர் எடுத்த 9 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். மொத்தம் 18 விக்கெட்டுகளை எடுத்த அவர் டைல் எண்டராக எதிர்பாராத முக்கியமான ரன்களையும் எடுத்தார்” என்று பாராட்டியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஓலி ராபின்சன், கடந்த 2021இல் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகப் போட்டியில் களமிறங்கினாலும் அசத்தலாக செயல்பட்டு இரட்டை சதமடித்து தனது அணியை வெற்றி பெற வைத்த நியூசிலாந்தின் டேவோன் கான்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மகளிர் வீராங்கனை டேன் வன் நிகேர்க் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து விஸ்டனின் கௌரவத்தை பெற்றுள்ளர்னர்.

இதையும் படிங்க : அவமானம், விமர்சனம் ! மும்மடங்கு பார்முக்கு திரும்பி மொத்தமாய் திருப்பி அடிக்கும் நட்சத்திர வீரர் – முழு விவரம்

அத்துடன் கடந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் மிரட்டலாக செயல்பட்ட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் சிறந்த டி20 கிரிக்கெட்டராக கௌரவப்படுத்த பட்டுள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான் இந்திய வீரர்கள் இந்த கௌரவத்தைப் பெற்றாலும் இப்படி ஒரே வருடத்தில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா என 2 இந்தியர்கள் இந்த விஸ்டன் கவுரவத்தை பெறுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

Advertisement