கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி குறித்து எமோஷனல் ஸ்டோரி போட்ட ரோஹித் சர்மா – வைரலாகும் பதிவு

Rohit-and-Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஐந்து கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அறிமுக சீசனில் இருந்து சென்னை அணியின் ஈடு இணையற்ற கேப்டனாக இதுவரை மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக நேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி அந்த பதவியை சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கியுள்ளார்.

- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய அவர் ஜடேஜாவிற்கு அந்த வாய்ப்பை வழங்கினாலும் அதன் பின்னர் சிஎஸ்கே அணி மிகப்பெரிய சரிவை சந்தித்ததால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பினை ஏற்றிருந்தார். இவ்வேளையில் 42 வயதாகும் தோனி நிச்சயம் இந்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என்பதனாலே இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக பொறுப்பேற்க வைத்துள்ளார்.

இப்படி தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரது கேப்டன்சி குறித்தும், அவரது இந்த பதவி ராஜினாமா குறித்தும் எமோஷனலாக சில கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தோனி குறித்த ஸ்டோரி ஒன்றினை வைத்துள்ளார்.

- Advertisement -

அவரது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா பதிவிட்டது யாதெனில் : ரோஹித் மற்றும் தோனி ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும்படியும், தோனிக்கு ரோஹித் சர்மா கை கொடுப்பது போன்ற இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த சீசனில் ரோகித்தும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண வீரராக விளையாட இருக்கும் வேளையில் தோனியும் சாதாரண வீரராக விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : ஒரு சாதாரண வீரரை தோனி கிட்ட குடுத்தாலும்.. என்ன நடக்கும் தெரியுமா? – ஸ்ரீசாந்த் கொடுத்த சூப்பர் ஸ்பீச்

அதனை குறிப்பிடும் வகையில் தான் ரோகித் அந்த புகைப்படத்தை பதிவிட்டு எமோஷனலான ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். மும்பை அணியின் கேப்டன் பதிவியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் மும்பை அணியை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்வதையும் தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement