தடுமாறி வரும் ஓப்பனிங்.! களமிறங்க நான் தயார்.! இந்திய அதிரடி வீரர் சூளுரை

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய் மற்றும் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் சுழற்சி முறையில் ஆடிவருகின்றனர். நிரந்தரமான ஒரு தொடக்க ஜோடி இதுவரை அமையவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக தான் களமிறங்க தயாராக உள்ளதாக இந்திய ஒரு நாள் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் ரசிகர்களால் “HIT MAN” என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

rohit

மேலும், இந்திய அணியில் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்த போதும் சரி, நான் அணியில் ஆடிய போதும் சரி தொடக்க வீரராக களமிறங்குவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. தோனியால் அந்த வாய்ப்பு கிடைத்து நன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினேன். இப்போது டெஸ்ட் போட்டியில் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயமாக விளையாடுவேன் என்று ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா ஏற்கனவே ஒரு நாள் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது. மேலும் ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதத்தை அடித்த ஒரே வீரர் இவர் தான். அதிரடிக்கு பேர்போன சேவாக்கு அடுத்து இந்திய அணியின் தொடக்க வீரராக இவர்தான் அதிரடியா விளையாடி வருகிறார். எனவே டெஸ்ட் போட்டிகளில் சேவாக்கினை போன்று அதிரடியாக இவர் விளையாடுவர் என்று கண்டிப்பாக கூறலாம்.

hitman

சர்வதேச மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இவர் சதம் அடித்து இருக்கிறார். இவர் 181 ஒருநாள் போட்டிகளிலும் 84 டி20 போட்டிகளிலும் மற்றும் 25 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். கடைசியா டெஸ்ட் பொட்டில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2018 இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் விளையாடினார்.