INDvsNED : அப்படி இப்படின்னு சொன்னாங்க கடைசில ரோஹித் எடுத்த முடிவை பாத்தீங்களா? – விவரம் இதோ

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றில் தங்களது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி இன்று நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

DK-and-Rohit

- Advertisement -

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் நெதர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக முன்னணி முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு அவர்களுக்கு பதிலாக பெஞ்சில் இருக்கும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பேசப்பட்டது.

அதிலும் குறிப்பாக யுஸ்வேந்திர சாஹலுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டு வந்தது. ஆனால் சற்று முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தற்போது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றத்தையும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் செய்யவில்லை என டாசின் போது அறிவித்தார். அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி தான் இந்த போட்டியிலும் விளையாடி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் இந்த தொடரை துவங்கியுள்ளதால் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் அதே மனநிலையுடன் செல்லலாம் என்பதற்காகவே ரோஹித் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : 2003 உ.கோ’யில் சச்சினின் அந்த சிக்ஸருக்கு பின் இதுதான் வரலாற்றின் சிறந்த இன்னிங்ஸ் – பாராட்டும் ஜாம்பவான்

அதேபோன்று தொடர்ச்சியாக தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த போட்டிகளை வென்றால் இந்த அணியை செட்டில் ஆகி இறுதிவரை இதே அணியுடன் விளையாடும் என்பதாலும் இந்த தேர்வினை ரோகித் சர்மா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement