
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலக கோப்பை தொடரின் தங்களது முதல் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது.
பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணி தேர்வில் தவறு செய்து விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான சாஹலை நீக்கிவிட்டு அஸ்வினுக்கு அவர் இடம் கொடுத்துள்ளார். அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார் என்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சற்று கைகொடுக்க கூடியவர் என்பதனால் அவரை தேர்ந்தெடுத்தார்.
ஆனால் இன்றைய போட்டியில் அஸ்வினால் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன் விக்கெட் எதுவும் எடுக்காமல் போனார். அதேபோன்று மற்றொரு முக்கியமா மாற்றமாக டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஷமி அணியில் இடம்பெற்றார்.
கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த முகமது ஷமிக்கு ஏன் ரோஹித் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பயிற்சி போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : SL vs IRE : தொடரும் ஆசிய சாம்பியனின் வெற்றி நடை – அடுத்த டார்கெட் ஆஸ்திரேலியா தான், நடப்பு சாம்பியன் தப்புமா?
இப்படி ரோகித் எடுத்த சில முடிவுகள் சரிதானா என்பது குறித்த விவாதமும் தற்போது சமூகவலைதளத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்து உங்களது கருத்தையும் பதிவிடலாம் நண்பர்களே!