3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்களை செய்த ரோஹித் சர்மா – பிளேயிங் லெவன் இதோ

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஜனவரி 17-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் ஏற்கனவே இரண்டு போட்டியில் நாங்கள் பந்துவீசி விட்டதால் இம்முறை பேட்டிங் செய்ய விருப்பப்படுகிறோம்.

அதோடு இன்றைய போட்டிக்கான அணியில் சில மாற்றங்களையும் கொண்டு வர நினைக்கிறோம். அந்த வகையில் இந்திய அணிகள் மூன்று மாற்றங்களாக சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்குள் வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வெளியேறுகிறார்கள் என்று ரோகித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டதாலயே இந்த தொடரில் பெஞ்சில் அமர்ந்திருந்த மூன்று வீரர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நியூஸிலாந்தில் நிகழ்ந்த காமெடி.. பேட் இல்லாமலேயே ரன் எடுக்க ஓடிய ரிஸ்வான்.. கடைசில் நேர்ந்த பரிதாபம்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) விராட் கோலி, 4) ஷிவம் துபே, 5) சஞ்சு சாம்சன், 6) ரிங்கு சிங், 7) வாஷிங்டன் சுந்தர், 8) ரவி பிஷ்னாய், 9) முகேஷ் குமார், 10) குல்தீப் யாதவ், 11) ஆவேஷ் கான்.

Advertisement