கெயில், பொல்லார்டு, ஏ.பி.டி, கோலி வரிசையில் மகத்தான சாதனையில் இணைந்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

rohith 1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 223 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5809 ரன்களை குவித்துள்ளார். தனது ஆரம்ப கட்ட போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக பங்கேற்ற ரோகித் சர்மா பின்னர் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் அவரது தலைமையில் மும்பை அணி 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Mumbai Indians MI

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரும் தூணாக இருந்து வரும் ரோகித் சர்மா அந்த அணியை அற்புதமாக கேப்டன்சி செய்ததன் காரணமாக தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை மும்பை அணிக்கு ஒரு சுமாரான தொடராகவே இருந்து வருகிறது.

அதோடு இத்தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பும் அவர்களுக்கு முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 51-வது லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 28 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

 

- Advertisement -

rohith

அவரது இந்த ஆட்டம் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதோடு நேற்றைய போட்டியில் இரண்டு சிக்சர் அடித்த ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை பட்டியல் ஒன்றிலும் இணைந்துள்ளார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் நேற்று அடித்த 2 சிக்ஸர்களின் மூலம் 200 சிக்சர்களை அடித்து உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக மட்டும் 200 சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் 5 ஆவது வீரராக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக குறிப்பிட்ட ஒரு அணிக்காக 200 சிக்சரை விளாசிய வீரர்களாக :

இதையும் படிங்க : கடைசி ஓவர்ல 9 ரன்கள் எடுக்க முடியாமல் நாங்க மும்பை அணியிடம் தோக்க இதுவே காரணம் – ஹர்திக் வருத்தம்

பொல்லார்டு, கெயில், டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்தனர். இந்நிலையில் இந்த பட்டியலில் நேற்று ரோகித் சர்மா இணைந்து மாபெரும் சாதனை ஒன்றை நடத்தியுள்ளார். அதோடு ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா இதுவரை 218 ஆட்டங்களில் 236 சிக்ஸர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement