கடைசி ஓவர்ல 9 ரன்கள் எடுக்க முடியாமல் நாங்க மும்பை அணியிடம் தோக்க இதுவே காரணம் – ஹர்திக் வருத்தம்

Pandya
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற 51 வது லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது 2-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது.

Rohit Sharma Hardik Pandya MI vs GT

- Advertisement -

மும்பை அணி சார்பாக துவக்க வீரர் இஷான் கிஷன் 45 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்கள் குவித்தனர். இறுதிநேரத்தில் விளையாடிய டிம் டேவிட் 21 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பாக விரிதிமான் சஹா 55 ரன்களையும், சுப்மன் கில் 52 ரன்களையும் குவித்தனர். போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் மில்லர் மற்றும் திவாதியா ஆகியோர் களத்தில் இருந்ததால் குஜராத் அணிதான் வெற்றிபெறும் என்று அனைவரும் நினைத்தனர்.

Hardik Pandya Run Out

ஆனால் டேனியல் சாம்ஸ் கடைசிவரை சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அருமையான வெற்றியை மும்பை அணிக்கு பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் : கடைசி ஓவரில் 9 ரன்கள் என்ற இலக்கு இருக்கும்போது எந்த ஒரு நாளிலும் எங்களால் வெற்றி பெற முடியும்.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் இரண்டு ரன் அவுட்டுகளை நாங்கள் அடைந்தது எங்களுக்கு பலனளிக்காமல் போனது. டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால் இதுபோன்ற அழுத்தம் ஏற்படும். இறுதியில் நாங்கள் தோற்றது சற்று வருத்தமான ஒரு விடயம் தான். இந்த போட்டியில் கடைசி ஓவரின் 3-வது பந்து வரை நாங்கள் போட்டியில் தான் இருந்தோம்.

இதையும் படிங்க : நாங்க 15-20 ரன் கம்மியா அடிச்சோம். ஆனா இந்த ஒரு விஷயம் தான் நாங்க ஜெயிக்க காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

ஆனால் நல்ல கிரிக்கெட்டை விளையாடி இருந்தோம். இந்த எளிதான போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க காரணம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது மட்டும்தான் என ஹர்திக் பாண்டியா வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement