விராட் கோலி சதமடிக்காததை விடுங்க. ரோஹித்தின் இந்த சொதப்பலை கவனிச்சீங்களா? – என்ன நடந்தது?

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 12-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பிரமாதமான ஆட்டத்தை வழங்கியுள்ளது. பொதுவாகவே பகலிரவு போட்டியில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதனால் பெரிய ரன் குவிப்பு எப்போதுமே வராது. ஆனாலும் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் சுதாரித்து விளையாடிய இந்திய அணியானது முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் குவித்தது.

shreyas iyer 3

- Advertisement -

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 86 ரன்களை மட்டுமே அடித்து 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் மிக மோசமான நிலையில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சி உள்ளதால் விரைவில் இலங்கை அணி ஆல் அவுட் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி இலங்கை அணி ஒரு 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்சை இழந்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பெங்களூர் ரசிகர்கள் விரும்பினர். ஏனெனில் ஏற்கனவே 100-வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்சை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கோலி 40 ரன்கள் கடந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் தன்னுடைய 101 போட்டியில் பெங்களூரு ரசிகர்கள் மத்தியில் அவர் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Rohith

ஆனால் அதிர்ஷ்டவசமின்றி இந்த போட்டியிலும் 23 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி விராட் கோலி ஒருபக்கம் ஆட்டம் இழந்து வெளியேறியது ஒருபுறம் அதிர்ச்சி அளித்தாலும் மறுபுறம் ரோகித் சர்மாவின் தற்போதைய புள்ளிவிவரம் பெரிய கவலையை அளித்துள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா இந்த 2022-ஆம் ஆண்டு இதுவரை 11 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 238 ரன்களை மட்டுமே குவித்துள்ளார் என்று புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்ற பின்னர் இப்படி தொடர்ச்சியாக ரோகித் சர்மா பெரிய ரன்கள் அடிக்காமல் திணறி வரும் நிலையில் ஏற்கனவே ரோகித் சர்மா ஒரு நல்ல இன்னிங்சை நிச்சயம் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ரோகித் சர்மா அடுத்தடுத்த சறுக்கலை சந்தித்து வருவதால் அவர் மீது இனி வரும் போட்டிகளில் பெரிய இன்னிங்சை அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : செஞ்சுரியை தவறவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த மரியாதை – இதை கவனிச்சீங்களா?

அனைவரும் விராத் கோலியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த வேளையில் தற்போது ரோஹித்தின் இந்த அவுட் ஆப் பார்ம் ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை தந்துள்ளது. இருப்பினும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிச்சயம் ஒரே இன்னிங்சில் இழந்த பார்மை மீண்டும் மீட்டெடுக்க கூடியவர்கள் என்பது நாம் அறிந்ததே.

Advertisement