
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா இன்னும் சில ஆண்டுகள் தான் விளையாடுவேன் என்றும் அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை வெல்வது தான் தனது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 20,000 மேற்பட்ட ரன்கள், ஏகப்பட்ட சதங்களை விளாசியுள்ள ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமையை உடையவர்.
அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரோஹித் மிகவும் பிரபலம். இந்நிலையில் தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னதாக ஆரம்ப கட்டத்தில் சேவாக் பயிற்சி செய்வதை பார்க்க சென்றது குறித்து சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார்.
அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்காக அறிமுகமாகவதற்கு முன்னதாக பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருமுறை மும்பை வான்கடே மைதானத்தில் சேவாக் பயிற்சி மேற்கொண்டு இருப்பதாக அவருக்கு தகவல் தெரிந்துள்ளது.
அதன் காரணமாக பள்ளியிலிருந்து பாதியிலேயே கட்டடித்து வெளியேறிய ரோகித் சர்மா நேரில் மும்பை வான்கடே மைதானத்திற்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த சேவாக்கை அருகில் நின்று பார்த்திருக்கிறார். அதோடு அவருடைய ஆட்டோகிராபையும் வாங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க : புதிய வீரராக இருந்தாலும் என்னிடம் வந்து கேட்டு அந்த பரிசை விராட் கோலி எனக்கு வழங்கினார் – ஆகாஷ் தீப்
பின்நாளில் அவர் இந்திய அணியில் இணைந்து சேவாக்குடன் ஓய்வையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தனது சிறுவயது ஹீரோவான சேவாக்கின் அதிரடியான ஆட்டத்தை பார்க்கவே அவர் நேரில் சென்றதாகவும் அவர் மீது இந்த ஈர்ப்பு காரணமாகவே ரோஹித் சர்மாவும் அதிரடியாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.