ரோஹித்தின் அதிரடியான முடிவால் மகிழ்ச்சியடைந்த இலங்கை வீரர்கள். ஆனா ஜடேஜா அதிருப்தி – என்ன நடந்தது?

Jadeja-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மார்ச் 4-ஆம் தேதி மொகாலி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியானது நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 45 ரன்களுடனும், அஷ்வின் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியானது சிறப்பாக ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ரன்களில் தனது ஆட்டத்தை தொடர்ந்த அஷ்வின் அரைசதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் நேற்றைய போட்டியின் முடிவில் 45 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா தனது அதிரடியான அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் சதம் கடந்தார். சதம் கடந்தது மட்டுமின்றி 175 ரன்கள் அடித்து இந்திய அணி டிக்ளர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்களை எடுத்திருந்த போது திடீரென கேப்டன் ரோகித் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதன் காரணமாக ஜடேஜா சற்று அதிர்ச்சி அடைந்தார் என்றே கூறலாம்.

jadeja 2

ஏனெனில் ஜடேஜா 175 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி 2-வது நாளின் இரண்டாவது செசனில் மட்டுமே விளையாடி வந்தது. இதனால் ஜடேஜா எளிதாக 200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ரோஹித் அதனை வழங்க மறுத்தது ஜடேஜாவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை கண்ட ரசிகர்களும் சற்று அதிருப்தி அடைந்தனர். ஏனெனில் அவசரமாக டிக்ளேர் செய்யவேண்டிய கட்டாய நிலை ஒன்றும் இந்திய அணிக்கு அப்போது இல்லை ஆனாலும் ரோஹித் அவசரப்பட்டு டிக்ளேர் முடிவை அறிவித்தார்.

- Advertisement -

இன்னும் 4-5 ஓவர்கள் வரை ஜடேஜாவை விளையாட அனுமதித்து இருந்தால் கூட அவரால் அதிரடியாக ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்திருக்க முடியும். ஆனால் இப்படி இரட்டை சதம் அடிக்க இருந்த அருமையான வாய்ப்பை கிட்டத்தட்ட அவரிடம் இருந்து ரோஹித் சர்மா பறித்து விட்டார் என்றே கூறலாம். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் அதிகபட்ச ஸ்கோராக இந்த 175 ரன்கள் நாட்அவுட் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : பண்ட், தோனி, கபில்தேவ் என 3 பேரையும் தாண்டி 35ஆண்டு கால சாதனையை உடைத்து புதிய சாதனை – ஜடேஜா அபாரம்

ஒருவகையில் ரோஹித்தின் இந்த முடிவு இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்றே கூறலாம். ஏனெனில் நேற்றைய முதல் நாளிலிருந்து ஓய்வில்லாமல் 130 ஓவர்கள் வரை வீசிய இலங்கை வீரர்கள் ஒரு கட்டத்தில் இந்திய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாது என்று சோர்ந்து போயிருந்த வேளையில் ரோஹித் டிக்ளேர் கொடுத்தால் அவர்களுக்கு இந்த முடிவு மகிழ்ச்சியாகவும், இரட்டை சதத்தை அடிக்க முடியவில்லையே என்கிற வகையில் ஜடேஜாவிற்கு சோகமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement