- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சொதப்புனா என்ன பிரச்சனை இல்ல.. ரோஹித் மற்றும் விராட் விடயத்தில் நிர்வாகம் எடுத்துள்ள – முக்கிய முடிவு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்ட இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அளித்திருந்தது.

விராட் மற்றும் ரோஹித் ரொம்ப முக்கியம் :

இந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்க அனுபவ வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் பெரிய பங்களிப்பை வழங்காமல் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தியதும் காரணம் என்று பேசப்பட்டது. மேலும் அவர்கள் இருவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த பல்வேறு விவாதங்களும் சமூக வலைதளத்தில் எழுந்தன.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் டெஸ்ட் தொடர்களில் அவர்களை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்களும் நிலவி வருகின்றன. ஆனால் இந்த ஆஸ்திரேலிய தொடர் முடிந்து தற்போது இந்திய அணி நாடு திரும்பியிருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீட்டிங் ஒன்றினை ஏற்பாடு செய்து எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : நடைபெற்று முடிந்த இந்த மீட்டிங்கில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அணியின் பயிற்சியாளராக கம்பீர் தொடர்வார் என்றும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிச்சயம் அந்த தொடரில் விளையாடுவார்கள் என்று உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக அனுபவ வீரர்களான அவர்களுக்கு ஓய்வு அளிக்கக்கூடாது என்பதனால் அவர்களை இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாட வைத்து பார்மை மீட்டெடுத்து சாம்பியன்ஸ் டிராபிக்கு அனுப்ப வேண்டும் என்பதனாலே நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ மட்டும் அனுமதி கொடுத்தா நாங்களும் பெரிய இடத்துக்கு வந்துடுவோம் – ஏ.பி.டி வில்லியர்ஸ் கோரிக்கை

இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் நீக்கப்படாமல் தொடர்ந்து விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்திருந்தாலும் தொடர் முழுவதுமே 190 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதேவேளையில் ரோகித் சர்மா 5 இன்னிங்ஸ்களில் வெறும் 31 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -