ரோஹித் மட்டுமல்ல, மொத்தமா விளையாடுன 11 பேருக்கும் அபராதம் விதிப்பு- ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

MI Mumbai Indians
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டிக்கு முன்பாக பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் அதற்கு ஏற்றார் போல் அந்த அணி செயல்படவில்லை என்றே கூற வேண்டும்.

ஏனெனில் புனேவில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக ரோகித் சர்மா அறிவித்ததை அடுத்து மும்பை பவுலர்கள் பொறுப்பில்லாமல் ரன்களை வாரி வழங்கியதால் 20 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்த பஞ்சாப் 198/5 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தனர்.

- Advertisement -

பஞ்சாப் அசத்தல்:
ஆரம்பத்திலேயே மிரட்டலாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 52 (32) ரன்கள் எடுக்க ஷிகர் தவான் 70 (50) ரன்கள் விளாசினார்கள். கடைசியில் இளம் வீரர் ஜிதேஷ் சர்மா அதிரடியாக 30* (15) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பேசில் தம்பி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததால் 32/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது.

இருப்பினும் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர்கள் தேவாலட் ப்ரேவிஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை ஓரளவு மீட்டெடுத்தனர். இதில் ப்ரேவிஸ் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் அதிரடி காட்டிய திலக் வர்மா 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். போதாகுறைக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் கைரன் போலார்ட் 10 (11) ரன்களில் ரன் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

மும்பை 5-வது தோல்வி:
அந்த இக்கட்டான கடைசி நேரத்தில் 30 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 43 ரன்கள் எடுத்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் போராடிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 186/9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோற்றது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஓடின் ஸ்மித் 4 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

மறுபுறம் வென்றேதீர வேண்டும் என்ற இப்போட்டியிலும் சொதப்பிய மும்பை 5-வது தோல்வியை பதிவு செய்ததால் மீண்டும் 10-வது இடத்திலேயே திண்டாடுகிறது. நேற்றைய போட்டியில் 199 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு ஏற்கனவே பார்மின்றி தவிக்கும் ரோகித் சர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அதிரடியாக 28 ரன்கள் குவித்த போதிலும் பொறுப்பில்லாமல் திடீரென ஆட்டம் இழந்தது மும்பைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதை விட கேப்டன் ரோகித் சர்மா எடுத்த சொதப்பலான முடிவு மும்பை ரசிகர்களையே கடுப்பாக வைத்தது.

- Advertisement -

சொதப்பிய ரோஹித்துக்கு அபாரதம்:
ஏனெனில் மோசமாக இருக்கும் பந்துவீச்சை பலப்படுத்துவதற்காக 6 முதல் தரமான பேட்ஸ்மேன்களை மட்டுமே தேர்வு செய்த அந்த அணி 5 பவுலர்களை தேர்வு செய்தது தோல்விக்கு ஒரு முக்கிய பங்காற்றியது. இத்தனைக்கும் 8.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் டிம் டேவிட்டை ஒருசில போட்டிகளில் சொதப்பிய காரணத்தால் அந்த அணி பெஞ்சில் அமர வைத்து வருகிறது. பொதுவாகவே மோசமாக செயல்படும் வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து அதிக வாய்ப்பை வழங்கும் ஒரு அணியாக திகழும் மும்பை இப்படி ஒரு சில போட்டிகளில் சொதப்பியதன் காரணமாக அவரை பெஞ்சில் அமர வைத்து வெறும் 3 வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுவதற்காக அவ்வளவு தொகை செலவழித்து ஏன் வாங்கியது என ரசிகர்கள் ரோஹித்தை சாடுகின்றனர்.

இதை பார்த்த பல ரசிகர்கள் 5 கோப்பைகளை வென்று கொடுத்த மாஸ்டர்மைண்ட் கேப்டன் ரோஹித்தா இப்படி சொதப்பலான முடிவுகளை எடுக்கிறார் என வாயடைத்துப் போகிறார்கள். இந்நிலையில் பஞ்சாப்க்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக பந்து வீசியதை போட்டி நடுவர்கள் புகாரளித்ததை அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 24 லட்சமும் எஞ்சிய மும்பை வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.

இதையும் படிங்க : சோளியை முடித்த பஞ்சாப்! 5 தொடர் தோல்விகளால் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

ஏற்கனவே முதல் முறையாக மெதுவாக பந்து வீச்சுயதற்காக ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இது 2-வது முறை என்பதால் 24 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இதர வீரர்களுக்கும் 6 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement