- Advertisement -
இந்திய கிரிக்கெட்

12 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண வீரர்களாக மாற்றப்பட்ட ரோஹித் மற்றும் கோலி – எல்லாம் கம்பீரால் தான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்து வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர்கள் சிறிய அணிகளுக்கு இடையேயான தொடர் மற்றும் வலைப்பயிற்சி போன்ற சாதாரண ஈடுபாடுகளில் கவனம் செலுத்துவது கிடையாது.

முக்கியமான தொடர்களை குறிவைத்து அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்தனர். இதன் காரணமாக சிறிய அணிகளுக்கு இடையேயான தொடர் மற்றும் அவ்வப்போது ஓய்வு என இருந்து வந்த அவர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடாமலேயே சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான வீரர்களாக திகழ்ந்து வந்தனர்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி மற்றும் டிராவிட் ஆகியோரும் அவர்களை எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்படுத்தவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மாறியுள்ள கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் அனுபவ வீரர்களாக இருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவில் நடைபெற உள்ள துலீப் டிராபி தொடரில் விளையாட இருக்கின்றனர். இந்திய அணிக்கு அடுத்த மாதம் தான் டெஸ்ட் தொடர் வரவிருக்கிறது. இதன் காரணமாக அதற்கு முன் உள்ளூர் தொடர்களில் அவர்கள் விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு தான் ரஞ்சி தொடரில் விளையாடி இருந்தனர்.

இதையும் படிங்க : 4 – 5 அடியில் இதை செய்வதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளூரில் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காரு.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

அதற்கு அடுத்து தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்கள் உள்ளூர் தொடரில் விளையாட இருக்கின்றனர். அதேபோன்று இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -