பி.சி.சி.ஐ யின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ரோஜர் பின்னி யார்? – சுவாரசிய தகவல் இதோ

Roger-Binny
- Advertisement -

பிசிசிஐ-யின் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மீண்டும் பிசிசிஐ-யின் தலைவர் பதவியை தொடராத கங்குலி அந்தப் பதவியில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து நேற்று அக்டோபர் 18-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகளுக்கான பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

Roger Binny 1

- Advertisement -

இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி அதிகாரவபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பிசிசிஐ-யின் செயலாளர் பதவிக்கு ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரை தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பதவியை வகித்து வந்த சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிக்கப்படவில்லை. அவர் இந்தியா சார்பாக ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் இந்த பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஐசிசி-யின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் தான் யாரை நிற்கவைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Roger Binny 2

இந்நிலையில் ரோஜர் பின்னி யார் என்பது குறித்த ஒரு சிறிய தகவலை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 67 வயதான ரோஜா பின்னி வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட இந்தியராக இருந்து இந்திய அணிக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

- Advertisement -

அது தவிர்த்து இந்திய அணி முதல் முறையாக 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கைப்பற்றிய போது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் முதன்மை வீரராகவும் ரோஜர் பின்னி இடம் பிடித்திருந்தார். இந்திய அணியில் விளையாடிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக பார்க்கப்படும் ரோஜர் பின்னி கர்நாடக கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் இம்முறை போட்டியின்றி பிசிசி-யின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : 109 மீ இமாலய சிக்ஸரை அடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்த யு.ஏ.இ வீரர் – என்னா பவர்

இந்திய அணிக்காக அண்மையில் விளையாடிய பிரபல ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் தந்தை தான் இந்த ரோஜர் பின்னி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement