109 மீ இமாலய சிக்ஸரை அடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்த யு.ஏ.இ வீரர் – என்னா பவர்

Junaid-Siddique
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அதனால் மீதமுள்ள நான்கு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்யும் விதமாக தற்போது முதல் சுற்று ஆட்டங்களில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் விளையாடினர்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணியானது 73 ரன்களில் சுருண்டது.

அதன்காரணமாக இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஐக்கிய அமீரக அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியை சேர்ந்த ஜூனைத் சித்திக் அடித்த ஒரு சிக்சர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் மிகப்பெரிய சிக்சராக பார்க்கப்படும் இந்த சிக்ஸர் சேஸிங்கின் போது 17-வது ஓவரில் அடிக்கப்பட்டது. ஜூனைத் சித்திக் அடித்த அந்த சிக்சர் 109 மீட்டர் தூரம் பறந்து மைதானத்தையும் தாண்டியது.

இதையும் படிங்க : அவங்கள மட்டும் இந்தியா தோக்கடிச்சிட்டா வேர்ல்டுகப் நமக்குத்தான் – சுரேஷ் ரெய்னா வெளிப்படை

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தொடரின் மிகப்பெரிய சிக்சராக அமையவும் இந்த சிக்ஸருக்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தற்போது ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

Advertisement