இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு அவர் தான் காரணம்.. அதை யூஸ் பண்ணி ரோஹித் பின்னிட்டாரு.. ரோஜர் பின்னி

Roger Binny
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் பஸ்பால் அணுகு முறையுடன் விளையாட வந்த இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா தோற்று விடுமோ என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் வென்ற இந்தியா அபார கம்பேக் கொடுத்து 4 போட்டிகளின் முடிவிலேயே கோப்பையை வென்றுள்ளது.

அதனால் தங்களது சொந்த மண்ணில் 12 வருடங்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அடம் பிடித்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை பதிவு செய்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

- Advertisement -

பிசிசிஐ தலைவரின் கருத்து:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்யும் பென் ஸ்டோக்ஸ் தான் இங்கிலாந்தின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். மறுபுறம் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்காக பதறாமல் ரோகித் சர்மா சிறப்பாக இந்தியாவை வழி நடத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பென் ஸ்டோக்ஸ் கேப்டன்ஷிப் இதுவரை அதிக ஆக்ரோசத்துடன் இருக்கிறது. ஆனால் அதுவே இந்த தொடரில் சில போட்டிகளில் இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக கடினமான நேரங்களில் இந்திய ஸ்பின்னர்களை நங்கூரமாக விளையாடி பெரிய ரன்கள் அடிக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் அதிரடியாக எதிர்கொண்டு அவுட்டாகின்றனர்”

- Advertisement -

“ரோகித் சர்மா மீண்டும் இத்தொடரில் நுணுக்கமாக செயல்பட்டார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதை செய்வதற்கு தேவையான பவுலர்கள் அவருக்கு கிடைத்துள்ளனர். இங்கிலாந்து அணி தங்களுடைய திட்டத்தை மாற்றி விளையாடியதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் முதல் போட்டியில் அட்டாக் செய்து விளையாடியதை தொடர்கின்றனர். ஆனால் ரோகித் சர்மா மிகவும் பொறுமையாக இருந்தார்”

இதையும் படிங்க: பஸ்பால் பின்னாடி ஒளியாதீங்க.. அந்த 2 இந்திய வீரர்களை பாத்து கத்துக்கோங்க.. இங்கிலாந்தை விளாசிய நாசர் ஹுசைன்

“ஏனெனில் முதல் போட்டியின் வெற்றியும் ஒரு கட்டத்தில் கையில் இருந்து நழுவி சென்றது. அதை அறிந்து அடுத்த 2 போட்டிகளில் பொறுமையாக செயல்பட்ட அவர் வெற்றியும் கண்டார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து தரம்சாலாவில் நடைபெறும் கடைசி போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 131/5 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement