ஒரு சில தினங்களில் முடிவுக்கு வரும் கங்குலியின் பதவி – அடுத்த பி.சி.சி.ஐ யின் தலைவர் யார் தெரியுமா?

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ-யின் தலைவராக மிகச் சிறப்பான பணியை செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு போட்டியின்றி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்ற கங்குலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமானது மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையில் இந்த மாதத்துடன் அவரது பதவிக்காலமானது முடிவுக்கு வருகிறது. அதோடு அவருடன் செயலாளராக பதவியேற்ற ஜெய் ஷாவின் பதவிக்காலமும் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

Ganguly

- Advertisement -

இதன் காரணமாக புதிய தலைவர்களுக்கான பிசிசிஐ தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்தலானது அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உயர் பதவிகளில் ஆறு வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் இந்த தேர்தலில் போட்டிய போட்டியிட முடியாது என்ற விதிமுறை இருந்தது.

ஆனால் அந்த விதிமுறையினை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததால் மீண்டும் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரே பதவியில் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ தேர்தலில் சவுரவ கங்குலி நிற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ஷா மட்டும் தேர்தலில் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போகிறார் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Roger Binny

ஏனெனில் தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருக்கும் கங்குலி அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தலைவர் போட்டிக்கான தேர்தலில் பங்கேற்க உள்ளார். அதன் காரணமாகவே பிசிசிஐ-யின் பதவியை விடுத்து அவர் ஐசிசி-யின் தலைவர் பதவிக்கு கண் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக பிசிசிஐ தேர்தலை தவிர்க்கும் கங்குலி ஐசிசி தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படி கங்குலி தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை எனில் அடுத்தது பிசிசிஐ-யின் தலைவர் யார்? என்று எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : எல்லோருமே தோனியை இப்போ ரொம்ப மிஸ் பண்றாங்க. ஏன் தெரியுமா? – நினைவு கூர்ந்த ஷர்துல் தாகூர்

இந்திய அணிக்காக கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் ரோஜர் பின்னி விளையாடி உள்ளார். அது மட்டும் இன்றி 1983-ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement