2022 டி20 உ.கோ ரிப்பீட்.. நெதர்லாந்து தனித்துவ சாதனை.. 2011 உ.கோ சான்ஸ் கொடுக்காத தாய்நாட்டை வீழ்த்திய வீரர்

- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 17ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற 15வது போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை கத்துக்குட்டியான நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மழையால் தலா 43 ஓவர்களாக மாற்றப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 245/8 ரன்கள் குவித்து அசத்தியது.

குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 82/5 என சரிந்த அந்த அணிக்கு கேப்டன் எட்வார்ட்ஸ் அதிரடியாக 78* (69) ரன்களும் ரூஃலப் வேன் டெர் மெர்வி 29 (19) ஆர்யன் தத் 23* (9) ரன்களும் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர். மறுபுறம் கடைசி 9 ஓவரில் 109 ரன்களை மாறி வழங்கிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நிகிடி, மார்க்கோ யான்சென் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

தாய்நாட்டை வீழ்த்திய வீரர்:
அதை தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் பவுமா 16, டீ காக் 20, டுசன் 4, மார்க்கம் 1, கிளாசின் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கடைசியில் டேவிட் மில்லர் 43, கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்தும் 42.5 ஓவரில் 207 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டிய நெதர்லாந்து உலகக்கோப்பையில் 13 வருடங்கள் கழித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதை விட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் செமி ஃபைனல் செல்வதற்கு தயாராக இருந்த தென்னாப்பிரிக்காவை கடைசி போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நெதர்லாந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இதன் வாயிலாக 20, 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் தென்னாபிரிக்காவில் தோற்கடித்த முதல் டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணி என்ற தனித்துவமான வரலாற்று சாதனையை நெதர்லாந்து நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

இவை அனைத்தையும் தாண்டி இப்போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக 29 (19) ரன்களும் சுழல் பந்து வீச்சில் 3 ஓவரில் 34 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்த ரூஃலப் வேன் டெர் மெர்வி தம்முடைய தாய்நாடான தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஆம் ஜோகன்ஸ்பெர்க் நகரில் பிறந்த அவர் 2004 அண்டர்-19 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடி பின்னர் உள்ளூர் போட்டிகளில் அசத்தியதால் 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக அறிமுகமானார்.

அதில் தலா 13 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிய அவர் தம்முடைய அறிமுக போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48 ரண்களும் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார். ஆனாலும் அந்த சமயத்தில் அதிகப்படியான போட்டியால் இந்தியாவின் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்க உத்தேச அணிகள் தேர்வான அவர் நேரத்தில் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க: அவங்க எப்படி இதை பண்ணாங்கன்னு என்னால நம்பவே முடியல. நெதர்லாந்து அணியை பாராட்டிய – சச்சின் டெண்டுல்கர்

அதனால் 2015இல் நெதர்லாந்துக்கு குடிபெயர்ந்த அவர் இதுவரை 3 ஒருநாள் 36 டி20 போட்டிகளில் விளையாடிய அசத்தி வருகிறார். அதிலும் 2011 உலகக்கோப்பையில் கழற்றி விட்ட தென்னாப்பிரிக்காவை 2023இல் நெதர்லாந்து அணிக்காக இந்திய மண்ணில் அவர் ஆக்ரோஷமாக விளையாடி வீழ்த்தியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

Advertisement