புது பந்தால் வந்த சிக்கல். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் – இந்தியாவை அசைத்த இங்கி வீரர்

Robinson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்கி ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களைக் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட 99 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

Rohith

- Advertisement -

பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ரோஹித் மற்றும் புஜாரா ஆகியோர் 2 ஆவது விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய ரோஹித் மற்றும் புஜாரா ஜோடியானது இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 236 இருந்தபோது ரோஹித் சர்மா 127 ரன்களில் ஆட்டமிழந்தும் வெளியேற அதன்பின்னர் 61 ரன்கள் எடுத்திருந்த புஜாராவும் 237 ரன்களிருந்த போது ஆட்டம் இழந்து வெளியேறினார்.

pujara

இவர்கள் இருவரும் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவு வரை சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இவர்களது விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக புதுப்பந்து அமைந்தது. எப்போதுமே புதிய பந்தில் விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம். ஆனால் சற்று சமாளித்து ஆடினால் பந்து பழையதானதும் ரன்கள் கிடைக்கும். ஆனால் இந்த இரண்டாவது புதுப்பந்து எடுக்கப் பட்ட முதல் ஓவரிலேயே ராபின்சன் முதல் பந்தில் ரோகித்தையும், கடைசி பந்தில் புஜாராவையும் ஆட்டமிழக்க வைத்து வெளியேறினார்.

robinson 1

இதன்மூலம் இந்திய அணியின் சிறப்பான இன்னிங்சை சற்று அசைத்துப் பார்த்தார் என்றே கூறலாம். இறுதியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி தற்போது 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement