- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிதிஷ் ரெட்டியால் முடியும் போது பாண்டியாவால் அது முடியாதா? டெஸ்டில் கம்பேக் கொடுங்க.. உத்தப்பா கோரிக்கை

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா 2016இல் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் நல்ல ஆட்டத்தை அவர் இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் அவரால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கணித்தார்.

அந்த சூழ்நிலையில் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான ஹர்திக் பாண்டியா 2018இல் இங்கிலாந்து மண்ணில் நாட்டிங்கம் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதனால் கபில் தேவுக்குப் பின் இந்திய அணிக்கு திறமையான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆனால் அந்த வருடம் சந்தித்த மிகப்பெரிய காயம் அவருக்கு பெரிய பின்னடைவைக் கொடுத்தது.

- Advertisement -

கம்பேக் கொடுங்க பாண்டியா:

அந்த காயத்திலிருந்து குணமடைந்த பாண்டியா பழைய வேகத்தில் பந்து வீசத் தடுமாறினார். அதனால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் விளையாட முடியாது என்று வெளிப்படையாக அறிவித்த அவர் ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதற்கிடைப்பட்ட காலங்களில் இந்தியாவுக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மட்டும் விளையாடுங்கள் என்று அவருக்கு ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் அதை மறுத்த பாண்டியா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அவ்வப்போது காயமடைந்து வருகிறார். அதனால் அவரிடமிருந்து நகர்ந்த இந்திய கிரிக்கெட் அணி நித்திஷ் ரெட்டியை ஆல்ரவுண்டராக வளர்க்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா கோரிக்கை:

குறிப்பாக நித்திஷ் ரெட்டி வீசும் குறைவான ஓவர்களை பாண்டியாவால் வீச முடியாதா? என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் 7வது இடத்தில் விளையாட வந்தால் அது அற்புதமாக இருக்கும். அவர் விளையாடும் விதத்திற்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் கிரிக்கெட்டில் எப்போதும் நடக்காது என்று எதுவுமில்லை”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஆசியக் கோப்பை வேணும்ன்னா.. அவரை கூட்டிகிட்டு என்கிட்ட வாங்க.. பாக் தலைவர் பேட்டி

“ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல விரும்புகிறேன் என்று சொல்லி பாண்டியா மீண்டும் விளையாட வந்தால் பிசிசிஐ மறுப்பு சொல்லுமா? நிச்சயம் சொல்ல மாட்டார்கள். இப்போதெல்லாம் ஆல் ரவுண்டர்கள் 20 ஓவர்கள் வீசுகிறார்களா? நித்திஷ் ரெட்டி சுமார் 12 ஓவர்கள் மட்டுமே போடுகிறார். அதே போல தற்போது ஃபிட்டாக விளையாடும் பாண்டியாவால் ஒரு இன்னிங்சில் 12 – 15 ஓவர்கள் போட முடியும் என்று நான் நினைக்கிறேன். அது அவருடைய சொந்த முடிவு” என்று கூறினார்.

- Advertisement -