இந்த வருஷம் தோனிக்கு இருக்குற ஒரே பிரச்னை இதுதான்.. மத்தபடி அவரு ஆடுவாரு – ராபின் உத்தப்பா கருத்து

Uthappa-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள வேளையில் இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருப்பதினால் முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த சீசனானது 42 வயதான சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசன் என்பதினால் இந்த முறையையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் கேப்டனாகவே தோனி ஐபிஎல் தொடரிலிருந்து விடைபெற வேண்டும் என்பதற்காக காரணமாக மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து சென்னை அணியின் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

கடந்த ஆண்டு முட்டி வலியால் பாதிக்கப்பட்ட தோனி அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் தற்போது இந்த தொடரில் விளையாட இருக்கிறார். இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் :

தோனி நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் அவரை சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும். மேலும் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தோனியை விளையாட சொல்லி சி.எஸ்.கே அணி அழைக்கும். ஆனால் தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை.

- Advertisement -

தற்போது அவருடைய பிரச்சனையே விக்கெட் கீப்பிங் தான். ஏனெனில் அவருடைய முட்டி பகுதியில் தேய்மானம் ஏற்பட்டு இருக்கிறது. அதையும் மீறி அவர் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஒருவேளை தம்மால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்று அவர் நினைத்தால் நிச்சயம் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலக வாய்ப்பு உள்ளது என்று உத்தப்பா கூறினார்.

இதையும் படிங்க : சுயநலமற்ற அவர் இந்திய அணிக்கு தேவை.. ஐபிஎல் 2024 தொடரில் அவருடைய பேட் பேசும்.. ஹர்பஜன் நம்பிக்கை

அதனை தொடர்ந்து பேசிய ரெய்னா கூறுகையில் : சென்னையில் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே தோனி வந்து பயிற்சி செய்துள்ளார். எவ்வளவு வெயிலாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் பயிற்சி செய்த அவர் மீண்டும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்கிறார். இதன்மூலம் அவரது உடற்தகுதி நன்றாக இருப்பதாகவே உணர்வதாக ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement