35 வயசு ஆனா என்ன ? இந்த டி20 உலககோப்பைல விளையாடாம விடமாட்டேன் – சீனியர் வீரர் சபதம்

Uthappa
- Advertisement -

இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்து துவக்க வீரராக அதிரடி பேட்ஸ்மேன் என்று பெயர் பெற்றவர் ராபின் உத்தப்பா. 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற போது அந்த அணியின் துவக்க வீரர் இவர்தான். உத்தப்பா இதுவரை இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Uthappa

- Advertisement -

ஆனால் இவரால் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், மகேந்திரசிங் தோனி, யுவராஜ் சிங், கம்பீர், ரோகித் சர்மா, ஷிகர் தவான் போன்ற பல வீரர்களிடம் தனது இடத்தை இழந்தார். 2006 ஆம் ஆண்டு இந்திய அணியில் களமிறங்கி கடைசியாக 2015ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் ஆடி இருந்தார்.

அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் அவர் ஆடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் மீண்டும் இந்திய அணிக்காக மீண்டும் ஆடுவது குறித்து பேசியுள்ளார் ராபின் உத்தப்பா. இதுகுறித்து அவர் கூறியதாவது :

robin

தற்போது நான் களத்தில் இறங்கி நன்றாக ஆடவேண்டும். எனக்குள் இன்னும் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. நான் உண்மையிலேயே நன்றாக ஆடவேண்டும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் எனக்காக இருக்கிறது.

- Advertisement -

அந்த தொடரில் நான் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்று உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராபின் உத்தப்பா. ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Uthappa

இருப்பினும் தற்போது உள்ள வீரர்களுக்கே யார் யார் அணியில் இடம்பெறுவார்கள் என்பது தெரியாத நிலையில் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடாத இவர் எப்படி அணியில் இடம்பிடிப்பார் என்பது கேள்விக்குறிதான் என்பதே உண்மை.

Advertisement