தோனி அடிச்ச பந்தை பிடிக்க நெனைச்சு 2 விரலையே ஒரு பவுலர் ஒடச்சிக்கிட்டாரு – பல ஆண்டு நினைவை பகிர்ந்த உத்தப்பா

Uthappa
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று துவங்கி நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக தோனி குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏனெனில் இந்த ஆண்டு தனது கடைசி சீசனில் விளையாடுகிறார் என்று கூறப்படும் தோனி கோப்பையுடன் ஐபிஎல் தொடரிலிருந்து விடைபெற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ள வேளையில் தற்போது தோனியுடன் உறவு குறித்தும், நட்பு குறித்தும், அவருடன் இருந்த நிகழ்வுகள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது மனம் திறந்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Uthappa

- Advertisement -

அந்த வகையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து தோனியுடன் பயணித்த முன்னாள் இந்திய வீரரும், தோனியின் நண்பருமான ராபின் உத்தப்பா தோனியுடனான தனது முதல் சந்திப்பு எவ்வாறு நடந்தது என்பது குறித்த நினைவை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய ஏ அணிக்காக தோனி விளையாட வந்தார். அப்போது தலைநிறைய முடியோடு, பரட்டை மண்டையோடு இருக்கும் ஒரு வீரரை பார்த்தேன் அவர்தான் தோனி.

சின்னசாமி ஸ்டேடியத்தின் நடுவில் நின்று கொண்டு முனாப் பட்டேல் வீசிய பந்துகளை சிக்ஸருக்கு பறக்க விட்டுக் கொண்டிருந்தார். அதுமட்டும் இன்றி அந்த பயிற்சி முகாமில் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பல சிக்சர்களை தோனி தொடர்ச்சியாக பறக்க விட்டுக் கொண்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக மிரட்டலான சிக்ஸர்களை அடிக்கும் அவரை நான் அப்போது வியர்ந்து பார்த்தேன். தோனி அடித்த பல பந்துகள் மைதானத்திற்கு வெளியே போய் விழுந்தன.

uthappa 2

அதுதான் எம்.எஸ் தோனியை நான் முதல் முதலாக பார்த்த தருணம். தோனியின் பேட்டிங் பவரை நான் அவரை பார்த்ததுமே தெரிந்து கொண்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தோனிக்கு எதிராக ஒரு முறை ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியில் பந்து வீசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வீசிய பந்தை இறங்கி வந்து கடினமான ஷாட்டை தோனி அடித்தார். அப்படி அவர் அடித்த பந்து நேராக ஸ்ரீதரன் ஸ்ரீராமை நோக்கி சென்றது. அந்த பந்தை பிடிக்க நினைத்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் பந்து வந்த திசையில் கை வைக்க பந்து அவரது கையில் பட்டு பவுண்டரி லைனை நோக்கி சென்றது.

- Advertisement -

பின்னர் கைகளில் பந்து பட்ட பின்னரும் ஸ்ரீதர் ஸ்ரீராம் பவுண்டரி லைனை நோக்கி ஓடினார். நாங்கள் அனைவரும் பந்தை தடுக்க தான் அவர் ஓடுகிறார் என்று நினைத்தால் அவர் பந்தையும் தாண்டி பெவிலியனுக்கு உள்ளே ஓடினார். அப்போதுதான் அவரது கைகளில் இரண்டு விரல்கள் உடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. தோனி அடித்த பந்து எவ்வளவு வேகமாக சென்று இருந்தால் அவரது விரல்களை உடைந்து இருக்கும் பாருங்கள். அந்த அளவிற்கு அவர் பலமான வீரர். அதன் பின்னர் நானும் தோனியும் இந்திய அணிக்காகவும், மற்ற போட்டிகளிலும் நிறைய விளையாடி உள்ளோம் என்று கூறினார்.

இதையும் படிங்க : IPL 2023 : தோனிக்கும் காயமா? இன்றைய முதல் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? – நிர்வாகம் கொடுத்த விளக்கம்

மேலும் தங்களுக்கு இடையேயான நட்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பேசிய ராபின் உத்தப்பா கூறுகையில் : நானும் தோனியும் 2004-இல் தான் நண்பர்கள் ஆனோம். ஆனால் நான் அப்போது 19 வயதுக்கு உட்பட்டோர் அணியிலிருந்தேன். தோனி இந்திய ஏ அணியில் இருந்தார். இருந்தாலும் எங்களுக்கு ஒரு பயிற்சி முகாம் அபுதாபியில் நடந்தது. அப்போது அங்கு சென்ற நாங்கள் ஒன்றாக வெளியில் சுற்றுவது, ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக ஷாப்பிங் செய்வது என பழக்கத்தினாலே மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம். இன்றளவும் தோனி நான் அன்று பழகிய மாதிரி தான் என்னுடன் பழகுகிறார் என ராபின் உத்தப்பா மனம் திறந்த பேட்டியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement