IPL 2023 : தோனிக்கும் காயமா? இன்றைய முதல் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? – நிர்வாகம் கொடுத்த விளக்கம்

Dhoni
- Advertisement -

உலக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று மார்ச் 31-ஆம் தேதி இரவு ஏழு முப்பது (7:30) மணிக்கு துவங்குகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் தொடர் ரசிகர்களை ஆக்கிரமிக்கவுள்ள வேளையில் தற்போது ரசிகர்கள் இந்த ஐபிஎல் தொடரை வரவேற்க தயாராகிவிட்டனர். அதன்படி இன்று நடைபெற இருக்கும் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசன் என்று பெருமளவில் பேசப்பட்டு வருவதால் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலிருந்தே தங்களது வெற்றி கணக்கை துவங்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று இரவு அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கும் இந்த முதலாவது போட்டியில் தோனி களமிறங்குவாரா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

ஏனெனில் ஐபிஎல் தொடருக்காக முன்கூட்டியே சென்னை வந்து பயிற்சி மேற்கொண்ட தோனி சேப்பாக்கத்தில் கடைசி சில நாட்கள் பயிற்சியின் போது இடது காலில் மூட்டு வலியால் சற்று அவதிப்பட்டு உள்ளார் என்று கூறப்பட்டது. அதன் காரணமாக தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தோனி வலைப்பயிற்சியில் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகின.

Dhoni 1

மேலும் வலி தொடர்ந்து இருப்பதால் இன்று நடைபெற இருக்கும் முதலாவது போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் அளித்துள்ள பேட்டியில் :

- Advertisement -

“என்னை பொறுத்தவரை தோனி 100 சதவீதம் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ” வா தலை ஏழு மணிக்கு ரைடு போவோம்” என ட்வீட் செய்துள்ளதால் நிச்சயம் தோனி விளையாடுவது உறுதி என்றே கூறலாம்.

இதையும் படிங்க : IPL 2023 : காசு கொடுக்கும் போது எதுக்கு ஓய்வு கொடுக்கணும், ரோஹித் சர்மாவுக்கு மஞ்ரேக்கர் பதிலடி – காரணம் என்ன

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் முழு பார்மில் இருப்பதால் இன்றைய போட்டி சிஎஸ்கே அணிக்கும் குஜராத் அணிக்கும் எதிராக மிக கடினமாக இருக்கும் என்றும் ரசிகர்களுக்கு சற்றும் விறுவிறுப்புக்கும், சுவாரசியத்திற்கும் பஞ்சமின்றி இந்த போட்டியில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement