IPL 2023 : காசு கொடுக்கும் போது எதுக்கு ஓய்வு கொடுக்கணும், ரோஹித் சர்மாவுக்கு மஞ்ரேக்கர் பதிலடி – காரணம் என்ன

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் 10 அணிகளில் பல்வேறு இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளுக்காக விளையாட தயாராகி வருகின்றனர். இருப்பினும் வரும் ஜூன் மாதம் 7 – 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று துவங்கும் 2023 ஐபிஎல் தொடர் வரும் மே 28ஆம் தேதி தான் நிறைவடைகிறது.

IPL-2023

- Advertisement -

முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இதே போல் ஒரு வாரம் முன்பாக இங்கிலாந்து பயணித்து வலை பயிற்சிகளை மட்டும் செய்து நேரடியாக களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்தியாவை ஒரு மாதம் முன்பாகவே இங்கிலாந்து பயணித்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1 – 0 (2) என்ற கணக்கில் இருதரப்பு டெஸ்ட் தொடரை சாய்த்து முன்கூட்டியே சிறப்பாக தயாரான காரணத்தால் நியூசிலாந்து தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. எனவே பொதுவாகவே இங்கிலாந்து மண்ணில் திணறக்கூடிய இந்தியா இம்முறையும் அதே தவறை செய்யாமல் இருப்பதற்கு முன்கூட்டியே அங்கு பயணித்து தயாராவது அவசியமாகிறது.

காசு கொடுக்குறாங்க:
அந்த நிலையில் மே 28 வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஒரு வார இடைவெளிக்குள் எப்படி உடனடியாக இங்கிலாந்து பயணித்து அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு உட்பட்டு ஃபைனலில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல முடியும் என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் புஜாரா போன்ற வீரர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவும் லீக் சுற்றுடன் வெளியேறும் ஐபிஎல் அணிகளில் உள்ள முக்கிய வீரர்கள் 2 வாரத்திற்கு முன்பாகவும் இங்கிலாந்து பயணிப்பார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

IND vs AUS

அத்துடன் 2023 ஐபிஎல் தொடரில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களை குறிப்பிட்ட சில போட்டிகளில் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சொல்லப்போனால் மும்பை அணியில் சில போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வெடுப்பார் என்றும் அவருக்கு பதில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழி நடத்துவார் என்றும் நேற்று நேற்று வெளியானது. இந்நிலையில் பல கோடி ரூபாய்களை கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகங்கள் ஏன் அது போன்ற ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்த வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக சர்வதேச போட்டிகளில் அல்லது வலைப்பயிற்சிகளில் காயத்தை சந்தித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக சில முக்கிய வெளியேறினால் என்ன செய்ய முடியும் என்று தெரிவிக்கும் அவர் ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரின் வெற்றி பெரும்பாலும் வீரர்களின் ஃபிட்னஸை அடிப்படையாக கொண்டுள்ளது. அதில் அனைவரும் தங்களுடைய முழு திறமைக்கேற்றார் போல் விளையாடுகிறார்கள்”

Sanjay

“அதனாலயே ரசிகர்கள் விரும்பும் இந்த தொடர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதை விரும்பும் ஒருவராக நான் இருப்பதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் விளையாடும் போதும் காயத்தை சந்தித்து நிறைய முக்கிய வீரர்கள் வெளியேறுகிறார்கள் என்பதால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்”

இதையும் படிங்க:IPL 2023 : கேப்டன்கள் போட்டோ ஷூட்டில் ரோஹித் சர்மா இல்லாதது ஏன்? வெளியான செய்தியால் மும்பை ரசிகர்கள் கவலை

“எனவே ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. ஏனெனில் நிறைய பணத்தை செலவழிக்கும் அணி உரிமையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் வீரர்களை முழுமையாக தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்தும் சுதந்திரத்தை பெற வேண்டும். அதில் ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளது இந்திய ரசிகர்களை கடுப்பாக இருக்கிறது.

Advertisement