IPL 2023 : கேப்டன்கள் போட்டோ ஷூட்டில் ரோஹித் சர்மா இல்லாதது ஏன்? வெளியான செய்தியால் மும்பை ரசிகர்கள் கவலை

IPL-2023
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்தியாவின் டாப் நட்சத்திர வீரர்களும் ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர் போன்ற ஏராளமான வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் பங்கேற்பதால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகரான தரத்தை கொண்டை இத்தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. அந்த போட்டிக்கு முன்பாக வழக்கம் போல இந்த வருடத்தின் கோப்பையை அறிமுகப்படுத்தி கேப்டன்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல் கேப்டனாக இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து சாதனை படைத்த எம்எஸ் தோனி நடுவில் நின்றார்.

- Advertisement -

ரோஹித் எங்கே:
சொல்லப்போனால் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது இருந்த 8 அணிகளின் அனைத்து கேப்டன்களும் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தோனி மட்டுமே 15 வருடங்களை தாண்டி காலத்தை வென்ற காவிய தலைவனாக நின்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அவரை சுற்றி குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் போன்ற அவருடைய ரசிகர்களும் ரோல் மாடலாக கருதும் வீரர்களும் சக கேப்டனாக நின்றது மேலும் ஸ்பெஷலாகும்.

அத்துடன் டெல்லிக்கு டேவிட் வார்னர், ஹைதராபாத் அணிக்காக புவனேஸ்வர் குமார், பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான், பெங்களூருவின் கேப்டனாக டு பிளேஸிஸ், கொல்கத்தாவின் கேப்டனாக நிதிஷ் ரானா ஆகியோரும் அந்தப் புகைப்பட படப்பிடிப்பில் நின்று புன்னகையுடன் போஸ் கொடுத்தார்கள். ஆனால் அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கும் ரோஹித் சர்மா இல்லாதது குழப்பத்தையும் எங்கே சென்றார் என்ற கேள்வியையும் எழுப்பியது.

- Advertisement -

அதற்கு சில மும்பை ரசிகர்கள் இந்த தொடரின் இறுதியில் சாம்பியன் பட்டம் வென்ற பின் கோப்பையுடன் தனியாக போஸ் கொடுப்பார் என்று தெரிவித்தனர். அத்துடன் ஒரு கோப்பை வெல்ல திணறும் அணிகளுக்கு மத்தியில் ஏற்கனவே வென்ற 5 கோப்பைகளுடன் புகைப்படம் எடுக்க ரோகித் சர்மா சென்றதாகவும் சில மும்பை ரசிகர்கள் கலகலப்பாக தெரிவித்தனர். ஆனால் உண்மை என்னவெனில் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே அந்த புகைப்பட படப்பிடிப்பில் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தங்களது முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியினர் ஏற்கனவே அந்நகருக்கு பயணித்துள்ளார்கள். இருப்பினும் அங்கு சென்ற பின் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாதது போல் உணர்ந்ததால் இந்த ஒரு நிகழ்வுக்காக அங்கிருந்து அகமதாபாத் பயணிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கவலையும் மும்பை ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் அதற்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் அதற்குள் குணமடைந்து முதல் போட்டியில் விளையாடுவார் என்று வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாதது போல் உணர்ந்த காரணத்தாலேயே அஹமதாபாத் நகரில் நடைபெற்ற ஐபிஎல் கேப்டன்கள் ஒன்றுக்கூடி எடுத்துக்கொண்ட புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் பெங்களூருவுக்கு எதிராக ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை களமிறக்கும் முதல் போட்டியில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு செல்லக்கூடிய 4 அணிகள் இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

முன்னதாக ஜூன் 7ஆம் தேதி லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா விரும்பினால் ஓரிரு ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு கொடுக்க தயாராக இருப்பதாக மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement