அதை யார் செய்றாங்களோ அவங்க தான் ஜெய்ப்பாங்க.. மும்பை – சிஎஸ்கே போட்டியின் வெற்றியாளரை கணித்த உத்தப்பா

Robin Uthappa 3
- Advertisement -

கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 28வது லீக் போட்டி நடைபெறுகிறது. அதில் தலா 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் போல ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் பரம எதிரிகளாக பாவிக்கப்படுகின்றன. ஏனெனில் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பல தருணங்களில் வெற்றியைப் பெறுவதற்காக அனல் பறக்க ஆக்ரோசத்துடன் மோதிக் கொண்டுள்ளன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டியை பார்க்க ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

- Advertisement -

உத்தப்பாவின் கணிப்பு:
இம்முறை தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்த எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாதாரண வீரர்களாக விளையாட உள்ளனர். அந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து பும்ரா, ஜடேஜா என இரு அணிகளிலும் தரமான நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த வருடம் மும்பை மற்றும் சென்னை அணிகள் ஒரு முறை மட்டுமே மோதுவதால் இப்போட்டியை எந்த ரசிகரும் தவற விட மாட்டார் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் இப்போட்டியில் டாஸ் வென்று சேசிங் செய்பவருக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்கள் இம்முறை லீக் சுற்றில் ஒரு முறை மட்டுமே மோதுவதால் எந்த ரசிகரும் இப்போட்டியை தவற விட விரும்ப மாட்டார்கள். தற்சமயத்தில் மும்பை அணி மிகவும் அச்சுறுத்தலை கொடுக்கக் கூடியதாக இருப்பதை காண்பித்து வருகிறது. சிஎஸ்கே எப்போதும் சவாலை எதிர்கொள்ளக்கூடிய அணியாகும். எனவே இப்போட்டியில் இரு அணியிலும் பதற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: தோனி கிட்ட இருக்குற அந்த குவாலிட்டி அப்படியே ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருக்கு – ஸ்டீபன் பிளமிங் பாராட்டு

“ஆனால் வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இம்முறை டாஸ் வெல்லும் அணி அதிகப்படியான சாதகத்தை பெறுவார்கள். இப்போட்டியில் யார் சேசிங் செய்தாலும் அவர்களின் கை ஓங்கி இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய கடைசி 7 போட்டிகளில் டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement