அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாத வரை உங்களால் ஜெயிக்க முடியாது.. டெல்லி அணியை விளாசிய உத்தப்பா

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற 2வது லீக் போட்டியில் டெல்லியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. முல்லான்பூர் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சாய் ஹோப் 33, அபிஷேக் போரேல் 32* ரன்கள் எடுத்த உதவியுடன் 175 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு சாம் கரண் 63, லியம் லிவிங்ஸ்டன் 38* ரன்கள் அடித்து 19.2 ஓவரிலேயே வெற்றியை பெற்று கொடுத்தனர். அதன் காரணமாக காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் தலைமையில் முதல் போட்டியிலேயே டெல்லி தோல்வியை சந்தித்தது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

ஜெயிக்க முடியாது:
முன்னதாக அப்போட்டியில் பிரிதிவி ஷா, அபிஷேக் போரேல் ஆகியோரை தேர்வு செய்யாத டெல்லி நிர்வாகம் டாப் 3 இடங்களில் டேவிட் வார்னர், மார்ஷ், ஷாய் ஹோப் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை அதிரடியாக தேர்வு செய்தது. ஆனால் கடைசியில் பார்த்தால் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீராராக உள்ளே வந்த 21 வயது இந்திய வீரர் அபிஷேக் போரேல் 32* (10) ரன்கள் விளாசி டெல்லியை ஓரளவு காப்பாற்றினார்.

குறிப்பாக முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 17.1 ஓவரில் 138/7 என திணறிய டெல்லி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஹர்ஷல் பட்டேலுக்கு எதிராக 19வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவித்த அவர் டெல்லியை காப்பாற்றி வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் அபிஷேக் போரேல் போன்ற இந்திய வீரர்களை நம்பி டாப் ஆர்டரில் வாய்ப்பு வழங்காத வரை டெல்லியால் ஜெயிக்க முடியாது என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் தேர்வு செய்த இந்திய வீரர்களுக்கு ஏன் ஆதரவு தருவதில்லை? இந்திய வீரர்களுக்கு டெல்லி நிர்வாகம் ஆதரவு கொடுக்காததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : சென்னைக்கு மீண்டும் அதிர்ஷ்டம்? பிளே ஆஃப் சுற்று அட்டவணை பற்றி வெளியான தகவல்

“எப்போதும் இந்திய வீரர்களை முயற்சிக்காததே டெல்லி அணியுடன் என்னுடைய பிரச்சனையாகும். போரேல் டெக்னிக்கை பாருங்கள். அவர் டாப் ஆர்டரில் வந்தால் இன்னும் வெற்றிகரமாக செயல்பட்டிருப்பார். ஆனால் முயற்சிக்காவிட்டால் அவரைப் பற்றி எப்படி தெரிந்து கொள்ள முடியும். ஏன் அவரை 3 அல்லது 4வது இடத்துக்கு பதிலாக 9வது இடத்தில் பயன்படுத்துகிறீர்கள்? கடந்த வருடம் அதிக ரன்கள் அடித்த 2வது வீரராக அசத்திய அக்சர் பட்டேலை அவர்கள் 7வது இடத்தில் விளையாடினர். இப்படியே போனால் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை எப்போது தான் நீங்கள் பயன்படுத்துவீர்கள்” என்று கூறினார்.

Advertisement