தோனி, ரோஹித், கோலி மாதிரி சுதர்சனும் அழுத்தம் கொடுக்கும் லெவலை தொட்டிருட்டாரு.. உத்தப்பா பாராட்டு

Robin Uthappa 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் மும்பையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தொடரிலிருந்து குஜராத் அணி வெளியேறியது நிறைய தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அந்த அணிக்காக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகிய 4 வீரர்கள் வாய்ப்பு பெற்று நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடி 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்தார். அதனால் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்திய அவர் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக எலிமினேட்டரில் குஜராத் 229 ரன்களை சேசிங் செய்தது.

- Advertisement -

அசத்தும் சுதர்சன்:

அப்போது நங்கூரம் கலந்த கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் 80 ரன்களை அடித்து 15 ஓவர்களை வரை குஜராத்தின் கையை ஓங்க வைத்திருந்தார். இருப்பினும் அவரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் குஜராத் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் சாய் சுதர்சன் விளையாடும் வரை எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி மேலே அழுத்தம் இருந்ததாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

அதே போட்டியில் கேட்ச்களை தவற விட்டதைப் பயன்படுத்திய ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்து குஜராத் மேலே அழுத்தத்தை உண்டாக்கியதாக உத்தப்பா கூறியுள்ளார். அதே போல சாய் சுதர்சன் எதிரணிகள் மீது அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் விளையாடத் துவங்கியுள்ளதாகவும் உத்தப்பா பாராட்டியுள்ளார். அது போன்ற லெவலை தோனி, ரோஹித், கோலி மட்டுமே பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

உத்தப்பா பாராட்டு:

“ஆரம்பத்திலேயே கேட்ச்கள் தவற விட்டதால் ரோஹித் சர்மா பெரிய ஆபத்தைக் கடந்தார். ஆனால் உடனடியாக அவர் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார். அதற்காக கியரை மாற்றி பொறுப்புடன் விளையாடிய அவர் இடைவெளிப் பார்த்து அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அப்படி ரோஹித், தோனி, கோலி போன்றவர்கள் களத்தில் இருக்கும் போது அழுத்தம் எதிரணி மீது இருக்கும்”

இதையும் படிங்க: 204 ரன்ஸ்.. கருண் நாயர் இரட்டை சதம்.. நிஜமாகும் 8 வருட இந்திய அணி கனவு.. ஜுரேல் அசத்தல்

“தற்போது சாய் சுதர்சன் அதே போன்ற லெவலை தொடத் துவங்கியுள்ளார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சாய் சுதர்சன் இந்தியாவுக்காக அடுத்த நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளதால் அவருக்கு அத்தொடரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement