தோனிகிட்ட அந்த ஃபயர் இருக்கு.. ஃபிட்னெஸ் இருந்தா 2026இல் விளையாடுவாரு.. இல்லனா ஓய்வு.. உத்தப்பா பேட்டி

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே மோசமான சாதனையுடன் வெளியேறியது. இதற்கிடையே அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி விளையாடுவாரா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

அது பற்றி குஜராத்துக்கு எதிரான கடைசிப் போட்டியின் முடிவில் அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு “அடுத்த வருடம் வருவேன் என்றும் சொல்லவில்லை, வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை” என தோனி ட்விஸ்ட் வைத்து பதில் கொடுத்தார். அந்த முடிவை எடுப்பதற்கு போதுமான நேரம் இருப்பதாக தெரிவித்த தோனி 3 – 4 மாதங்கள் கழித்து பொறுமையாக யோசித்து முடிவெடுக்க உள்ளதாக கூறினார்.

- Advertisement -

ஃபயர் இன்னும் இருக்கு:

ஒருவேளை அடுத்த வருடம் விளையாட வேண்டுமானால் அதற்காக தாம் மீண்டும் கடினமாக உழைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றும் தோனி கூறினார். இந்நிலையில் 45 வயதிலும் சிறப்பாக விளையாடி சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும் நெருப்பும் தோனிக்குள் என்னும் இருப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். எனவே ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தோனி மனதளவில் தயாராக இருப்பதாக உத்தப்பா கூறியுள்ளார்.

அதற்கு அவருடைய உடல் 45 வயதில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். ஒருவேளை ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என்று தெரிவிக்கும் அவர் இல்லையேல் ஓய்வை அறிவிப்பார் எனக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் அவருடைய ஆரோக்கியம் மற்றும் அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பொறுத்து அமையும்”

- Advertisement -

உத்தப்பா கணிப்பு:

“அதே சமயம் அவர் இன்னும் விளையாட விரும்புகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்குள் இன்னும் அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த போட்டியின் முடிவில் தோனி பேசியதை வைத்து களத்திற்கு சென்று நன்றாக விளையாடி சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது”

இதையும் படிங்க: ஐ.பி.எல் போட்டிகளில் முதல் பந்துவீச்சாளராக சுனில் நரேன் நிகழ்த்திய அசாத்திய சாதனை – விவரம் இதோ

“அதற்காக தற்போது அவர் மீண்டும் வீட்டுக்கு சென்று தன்னுடைய உடலுடன் வேலை செய்து அதை அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராக எடுத்து வரவேண்டும். ஒருவேளை அது முடியாவிட்டால் 2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார். இல்லையென்றால் அவருடைய ஓய்வு முடிவை ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களால் பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement