
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி விளையாட உள்ளது ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்ட அவர் இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். 2019 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
தற்போது 43 வயதாகும் அவர் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் கடந்த வருடம் அதிரடியான பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்த தோனி வயதானாலும் தமது ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். அதே போல இந்த வருடமும் விளையாடத் தயாராகி வரும் அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற சூழ்நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில் ஃபிட்னஸ் மற்றும் ஆர்வம் காரணமாக தோனி தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார். 43 வயதானாலும் விக்கெட் கீப்பிங் செய்வதில் உலகிலேயே தோனி சிறந்தவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் தோனியின் ஓய்வு குறித்து உத்தப்பா பேசியது பின்வருமாறு. “மஹியை கொடுத்த வரை அவருடைய புத்திசாலித்தனத்தின் துளிகளை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன்”
“கடந்த வருடத்தைப் போலவே இம்முறையும் அவர் 7 அல்லது 8வது இடத்தில் விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் அடிப்பது போன்ற ஆட்டத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்துவார் என்று கருதுகிறேன். கிரிக்கெட்டின் மீதான காதல் எம்எஸ் தோனிக்கு குறையவில்லை. அவருடைய ஆர்வம் தொடர்ந்து செல்கிறது. 43 வயதிலும் அவர் இந்த உலகில் விக்கெட் கீப்பிங் செய்வதில் வேகமான கைகளைக் கொண்டுள்ளார்”
“அப்படி உங்களிடம் திறமையும் ஆர்வமும் இருந்தால் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதை எதுவும் நிறுத்த முடியாது. இந்த வருடத்தின் முடிவில் தோனி ஓய்வு பெற்றால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. அதே சமயம் அவர் இன்னும் 4 வருடங்கள் விளையாடினாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: 7 – 8 வயசுலயே சச்சினுக்காக இதை செஞ்சுருக்கேன்.. கிரிக்கெட்டில் விளையாட காரணமே சச்சன் தான்.. கில் பேட்டி
கடந்த 11 இன்னிங்ஸில் 161 ரன்களை 220.54 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி எடுத்தார். அதே போல இந்த வருடமும் அவர் அதிரடியாக விளையாடத் தயாராகி வருகிறார். ஒருவேளை இந்த வருடம் கோப்பையை வென்றால் அத்தோடு தோனி ஓய்வு பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.