சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா ஓப்பனர் ? தோனி கொடுத்த கிரீன் சிக்னல் – அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்

CSK-1

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது. அந்த அணியில் இருந்த வீரர்கள் பலரும் வெளியேறி உள்ள நிலையில், மேலும் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் அந்த அணி மிகப்பெரிய பின்னடைவை தாங்கியுள்ளது. எனக்கு அந்த அணி வெளிப்படையாகவே வந்து, மற்ற அணியில் இருக்கும் வீரர்களை தங்கள் அணிக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டி வணங்கி கேட்டுள்ளது.

Stokes

அதன்படி பார்க்கையில் சென்னையில் உள்ள ராபின் உத்தப்பாவை தங்களுக்கு தருமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், சென்னை அணி நிர்வாகத்திடம் சமீபத்தில் கேட்டுள்ளது.
சென்னை அணி அதனுடைய முதல் போட்டியில் தோல்வி பெற்றாலும் அதற்கு அடுத்த ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனவே இனிவரும் போட்டியில் அந்த அணி அதனுடைய வீரர்களை மாற்றாது என்றே நாம் நம்பலாம். சென்னை அணி எப்பொழுதும் தங்களுடைய வெற்றி வீரர்களை அவ்வளவு எளிதில் மாற்றி விடாது. மேலும் அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சரியான ஃபார்மில் செட் ஆகி உள்ளனர்.

எனவே இனி வரும் போட்டிகளில் அந்த அணி எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாது. எனவே ஆரம்பத்தில் இருந்து ஒரு போட்டியில் கூட விளையாடாத ராபின் உத்தப்பா, இனி சென்னை அணிக்காக வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. எனவே அந்த அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராபின் உத்தப்பா தங்களது அணிக்கு விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளது.

Uthappa

இதற்கு மகேந்திர சிங் தோனி, ராபின் உத்தப்பாவுக்கு சம்மதம் என்றால் தாராளமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்று விளையாட்டும் என்று ஒப்புதல் அளித்துள்ளார். தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் விளையாடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று ராபின் உத்தப்பா கூறியிருந்தார். மேலும் இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஆயிரம் ரன்களைக் குவிக்க போவதாகவும் சந்தோஷமாக கூறியிருந்தார்.

- Advertisement -

uthappa 1

ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர் சென்றுவிடுவார் போல தெரிகிறது.