ஏற்கனவே ரவி சாஸ்திரியால் 2 முறை இந்திய அணி கோட்டைவிட்டது. அவரை உடனடியாக மாற்றுங்கள் – ராபின் சிங்

- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

ravi koli 2

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் ரவிசாஸ்திரி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ரவி சாஸ்திரியின் தலைமையில் இரு முறை இந்திய அணி அடுத்தடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை சென்றாலும் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி இரண்டு முறையும் இது போன்று அடுத்தடுத்து அரையிறுதிப் போட்டியில் வெளியேறியது அதிர்ச்சியை அளிக்கிறது.

ravi
இதனால் பயிற்சியாளரை மாற்றி புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். ஏனெனில் அடுத்து சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என பல முக்கியமான கோப்பைகள் வர இருக்கிறது. எனவே தலைமை பயிற்சியாளர் பதவியில் சில மாற்றங்களை நான் எதிர்பார்க்கிறேன் அடுத்து வரும் கோப்பைகளை கருத்தில் கொண்டு பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ராபின் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement