20 நிமிடம் லேட் ஆயிருந்தா நான் செத்தே போயிருப்பேன். செமி பைனலுக்கு முன் என்ன நடந்தது – ரிஸ்வான் வெளிப்படை

Rizwan
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், துவக்க வீரரான முகமது ரிஸ்வான் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 67 ரன்கள் குவித்து அசத்திய ரிஸ்வான் அந்த செமி பைனல் போட்டிக்கு முன்பு இரண்டு நாள் ICU-வில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

rizwan 1

மேலும் நுரையீரல் தொற்று காரணமாக கடும் காய்ச்சலில் அவதிப்பட்ட அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் இருந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து நேராக வந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடி பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களை குவித்தார். தான் மருத்துவமனையிலிருந்து உடனடியாக வந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடியே தீரவேண்டும் என்று உறுதியுடன் ஆடிய அவரது அந்த மனநிலை மற்றும் முடிவு ஆகியவற்றிற்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

- Advertisement -

மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்த அவரது எண்ணத்தை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் தான் அந்த அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் மருத்துவமனை செல்ல என்ன காரணம் ? என்றும் அங்கு என்ன நடந்தது ? என்றும் ரிஸ்வான் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

rizwan

அதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : நான் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சு விட மிகவும் சிரமப்பட்ட போது மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு உயரிய சிகிச்சை தரப்பட்டது. இன்னும் 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் மூச்சு குழாய் வெடித்து இருக்கும் என்று செவிலியர்கள் என்னிடம் கூறினார்கள் என ரிஸ்வான் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நானும் அந்த இந்திய வீரரை போன்று பயமில்லாமல் விளையாடப்போறேன் – ஜாஸ் பட்லர் ஓபன்டாக்

மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாலும், மருத்துவமனை ஊழியர்கள் சரியான கவனிப்பினாலும் தான் சிக்கலில் இருந்து மீண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். துபாய் மருத்துவமனையில் ரிஸ்வானுக்கு சிகிச்சை அளித்து ஒரு இந்திய மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement