இன்னும் 2 வருஷத்துல ரியன் பராக் அதையும் சாதிப்பாரு.. இஷானுக்கு இர்பான் பதான் மறைமுக அறிவுரை

Irfan Pathan 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக மார்ச் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. அந்த போட்டியில் 36/3 என தடுமாறிய போது 84* ரன்கள் அடித்து காப்பாற்றிய ரியான் பராக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் ராஜஸ்தான் அணிக்காக 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டு வந்தார். அதனால் ரசிகர்களின் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்த அவர் இம்முறை 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்று இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் முறையே 43 (29), 84* (45) ரன்கள் அடித்து ஃபார்முக்கு வந்துள்ளார்.

- Advertisement -

பதான் பாராட்டு:
முன்னதாக ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் கடந்த 12 மாதங்களில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை, ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் ரியான் பராக் மிகச் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்கள் குவித்தார். அப்படி உள்ளூர் தொடர்களில் அசத்தியதே 2024 ஐபிஎல் தொடரில் தமக்கு உதவுவதாக ஆட்டநாயகன் விருது வென்ற பின் ரியான் பராக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டை குறைத்து எடை போட்டு ஐபிஎல் தொடருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் இஷான் கிசான் போன்ற வீரர்கள் ரியான் பாராக்கை பார்க்க வேண்டுமென இர்பான் பதான் மறைமுகமாக கூறியுள்ளார். ஏனெனில் கடந்த மாதம் இந்தியாவுக்காக தேர்வு செய்ய ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு இசான் கிசானை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

ஆனால் அதை செய்யாத இஷான் கிசான் ஐபிஎல் தொடருக்கு தயாரானதால் இந்திய அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து பிசிசிஐ நீக்கியது. அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் மும்பைக்காக இசான் கிசான் சுமாராக விளையாடி வருகிறார். எனவே அவரை போன்ற வீரர்கள் ரியான் பராக்கை பார்க்க வேண்டும் என்று இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அடுத்த 2 வருடத்தில் ரியான் பராக் இந்தியாவுக்காகவும் விளையாடுவார் என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசி ஓவரை இப்படித்தான் போடனும்னு முடிவு பண்ணிட்டுதான் போட்டேன்.. டெல்லியை வீழ்த்திய ஆவேஷ் கான் பேட்டி

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய உள்ளூர் கிரிக்கெட்டை எப்போதும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களுடைய நல்லதுக்கானதாகும். ரியன் பராக்கை பாருங்கள். உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் அடித்ததாலேயே அவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் அசத்துகிறார். அடுத்த 2 வருடங்களில் ரியன் பராக் இந்தியாவுக்காகவும் விளையாடுவார்” என்று கூறினார்.

Advertisement