கடைசி ஓவரை இப்படித்தான் போடனும்னு முடிவு பண்ணிட்டுதான் போட்டேன்.. டெல்லியை வீழ்த்திய ஆவேஷ் கான் பேட்டி

Avesh-Khan
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி நேரத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 185 ரன்கள் குவிக்க 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கினை நோக்கி விளையாடிய டெல்லி அணியும் சிறப்பாகவே விளையாடி வெற்றியை நோக்கி முன்னேறியது.

- Advertisement -

ஆனால் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஒரு கட்டத்தில் போட்டியின் இறுதி ஓவரின் போது டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக எந்த அணி வெற்றி பெறும்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த நேரத்தில் களத்தில் அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் இருந்ததால் போட்டி எவ்வாறு வேண்டும் என்றாலும் முடிந்திருக்கலாம்.

ஆனால் ராஜஸ்தான் அணி சார்பாக கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் அந்த ஓவரில் (1,0,1,1,0,1) என ஆறு பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதன் காரணமாகவே ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருவேளை அவர் வீசிய அந்த ஓவரில் இரண்டு மூன்று பவுண்டரிகள் சென்று இருந்தால் டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கக்கூட வாய்ப்பிருந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் டெல்லி அணியின் வீரர்களை கட்டுக்குள் வைத்து வீசிய ஆவேஷ் கான் கடைசி ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். இந்நிலையில் போட்டி முடிந்து கடைசி ஓவர் குறித்து பேசிய ஆவேஷ் கான் கூறுகையில் : கடைசி ஓவரின் போது என்னுடைய திட்டம் தெளிவாக இருந்தது. அதாவது மைதானத்தின் ஒரு புறம் பெரியதாக இருந்ததால் நான் வொயிடு யார்க்கர் பந்தை வீச முயற்சித்தேன்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் தோக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் வருத்தம்

மேலும் ஒவ்வொரு பந்துக்கு முன்னதாகவும் 5 நொடிகள் யோசித்து அதன்படியே செயல்பட்டேன். எங்களது அணியில் ட்ரென்ட் போல்ட், பர்கர், சந்தீப் சர்மா போன்ற வீரர்கள் இருப்பதினால் அவர்களிடம் இருந்தும் நான் நிறைய விடையங்களை கற்று வருகிறேன். அதோடு டீம் மேனேஜ்மென்ட்டும் எனக்கு ஆதரவு வழங்கி ஊக்கப்படுத்தி வருவதால் என்னுடைய திறனை நான் முன்னேற்றி வருகிறேன் என ஆவேஷ் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement