ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் தோக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் வருத்தம்

Pant
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தாலும் ரியான் பராக், அஸ்வின், ஜுரேல் மற்றும் ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரியான் பராக் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் குவித்தார். பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

இதில் ஒரே ஒரு சிறப்பான விடயம் யாதெனில் : எங்களது அணியின் பவுலர்கள் முதல் 15 – 16 ஓவர்கள் வரை மிகச் சிறப்பாக செயல்பட்டனர். டி20 கிரிக்கெட்டில் இறுதிக்கட்ட ஓவர்களில் தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சிப்பார்கள். அதுவே இந்த போட்டியிலும் நடந்துள்ளது.

இதையும் படிங்க : 3-4 வருஷமாவே அந்த பையன் பத்தி தான் என்கிட்ட அதிகமா கேள்வி கேக்குறாங்க. வெற்றிக்கு பின்னர் – சஞ்சு சாம்சன் பேட்டி

அதேபோன்று எங்களது அணியிலும் வார்னர் மற்றும் மார்ஷ் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தாலும் மிடில் ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தேவையான இலக்கை நோக்கி செல்ல முடியவில்லை. இதுவே எங்களது அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement