மும்பையை வீழ்த்தினாலும் நாங்க செய்ய வேண்டிய வேலை இன்னும் நிறைய இருக்கு – ரியான் பராக் பேச்சு

Riyan Parag
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மும்பை அணியை வீழ்த்தியதற்கு பிறகு பேசிய : ரியான் பராக்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே குவித்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாகவும் தகுதி பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : எங்களது திட்டப்படியே அனைத்தும் சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம். ஆனாலும் இன்னும் நாங்கள் நிறைய விடயங்களில் முன்னேற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. அதனை விரைவாக செய்ய இருக்கிறோம்.

இந்த போட்டியின் போது ஆர்ச்சரை ஏழாவது இடத்திலும், ஜடேஜாவை ஒன்பதாவது இடத்திலும் இறக்க காரணம் யாதெனில் : களத்தில் இருக்கும் இரு பேட்ஸ்மேன்களும் சிங்கிள் எடுப்பதை விட ஒரு பேட்ஸ்மேன் அடித்து விளையாட வேண்டும் என்பதற்காகவும், ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்சை நகர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவுகளை எடுத்தேன். இதே போன்ற சில முடிவுகளை ஏற்கனவே எடுத்துள்ளேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சேசிங் செய்ய வேண்டிய இந்த இலக்கை கோட்டை விட இதுதான் காரணம் – ஹார்டிக் பாண்டியா பேச்சு

அதேபோன்று அசாம் மாநிலத்திற்காகவும் இதுபோன்ற முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அதேபோன்று நான் எடுத்த சில முடிவுகள் சரியாக வந்து தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அடுத்ததாக எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாட காத்திருப்பதாகவும் ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement