சேசிங் செய்ய வேண்டிய இந்த இலக்கை கோட்டை விட இதுதான் காரணம் – ஹார்டிக் பாண்டியா பேச்சு

Hardik Pandya
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 69-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தோல்வியை பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : பாண்டியா பேச்சு

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவிக்க அடுத்ததாக 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது : இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் பந்து வீச்சின் போது கூடுதலாக வழங்கி விட்டோம். இருந்தாலும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகவே செயல்பட்டு இருந்தனர்.

அதேபோன்று இரண்டாம் பாதியில் இந்த இலக்கு நிச்சயம் சேஸிங் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் பவர்பிளே ஓவர்களிலேயே அதிக விக்கெட்டுகளை நாங்கள் இழந்து விட்டதால் அதனை ஈடு செய்வது சிரமமாக மாறியது. நான் பேட்டிங்கிற்கு செல்லும் போது பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. அதன் காரணமாகவே என்னால் அதிரடியாகவும் விளையாட முடிந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : குவாலிபயர் 1 போட்டிக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

ஆனாலும் நாங்கள் இலக்கினை துரத்த முடியாமல் போக துவக்கம் சரியாக இல்லாததே காரணம். போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து இலக்கினை துரத்த முடியாமல் போனது என ஹார்டிக் பாண்டியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement