போட்டியின் ஆரம்பத்திலேயே லக் எனக்கு இருந்தது.. சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது குறித்து – ரியான் பராக் மகிழ்ச்சி

Riyan Parag
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது குறித்து : ரியான் பராக் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 128 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை மிகச் சிறப்பாக துவங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்த பின்னர் தங்களது வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே டாஸ் விழுந்தது எனக்கு அதிர்ஷ்டமாக மாறியது. அதனைத் தொடர்ந்து நாங்கள் நினைத்தபடி எங்களது திட்டத்தையும் சென்னை அணிக்காக எதிராக வெளிப்படுத்தியிருந்தோம்.

மழை பெய்து போட்டி தொடங்கியதால் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியதால் எங்களால் போட்டியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்த முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணமாக பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த மோசமான தோல்விக்கு காரணம் இதுதான் – ருதுராஜ் வருத்தம்

அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக மாறியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. நிர்வாகம் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு கேப்டனாக இந்த ஆண்டு என்னுடைய இலக்கு ஐ.பி.எல் கோப்பையை வெல்வது தான் அதற்காக கடினமாக உழைத்து வருவதாக ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement