ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த மோசமான தோல்விக்கு காரணம் இதுதான் – ருதுராஜ் வருத்தம்

Ruturaj Gaikwad
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

எங்களது தோல்விக்கு காரணம் இதுதான் : ருதுராஜ் கெய்க்வாட்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தது. சிஎஸ்கே அணி சார்பாக அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 43 ரன்களையும், கார்த்திக் சர்மா 18 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 128 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 52 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் மைதானத்தின் தன்மையை புரிந்து கொள்ள கடினப்பட்டோம். போட்டியின் ஆரம்பத்திலேயே ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பர்கர் போன்ற பவுலர்களின் ஓவர்களை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

- Advertisement -

அவர்கள் இருவருமே நல்ல லென்த்தில் பந்து வீசினார்கள். அதுமட்டுமின்றி கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் நல்ல சாதகம் இருந்தால் எங்களது பேட்டிங் சரிவை சந்தித்தது. யாராவது ஒரு வீரர் இறுதிவரை நின்று போட்டியை கொண்டு சென்றிருந்தால் 150 முதல் 160 ரன்கள் வரை கொண்டு சென்றிருக்கலாம். இன்றைய மாடர்ன் டே ஆட்டத்தில் ஒரு போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இதையும் படிங்க : தேவையில்லாம பேசாதீங்க.. சூரியகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயரா விளையாட இதுதான் காரணம் – கோச் விளக்கம்

ஆனால் போதிய அளவு ரன்களை நாங்கள் குவித்திருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் செய்த தவறே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன். எங்களது அணியில் நிறைய இளம் வீரர்கள் இருப்பதினால் அவர்கள் சற்று அனுபவத்தை பெற நேரம் பிடிக்கும். இந்த போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து அடுத்த போட்டிக்கு தயாராக காத்திருக்கிறோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement